Tuesday, April 15, 2014

பல்வேறு மருத்துவக் குறிப்புகள்

 துளசிச்சாறு 5 மி.லி. + வெங்காயச் சாறு 5 மி.லி.+ தேன் 10 மி.லி. தினமும் 2 வேளை குடிக்கவும். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.

நாட்பட்ட இருமலுக்கு பூண்டை (2 பல்) நசுக்கி, ஒரு டம்ளர் பாலிலிட்டு காய்ச்சவும். பாதியாக சுண்டியதும், வடிகட்டி சர்க்கரை சேர்த்து தினமும் 2 வேளை குடிக்கவும். அதிக அமில சுரப்பினால் அவதிப்படுபவர்கள் இந்த பூண்டு கஷாயத்தை தவிர்க்கவும்.

வெறும் தேனைக் குடித்தாலே சிலருக்கு இருமல் விலகும்.

கடுக்காயை நசுக்கி, முழுங்காமல் வாயில் வைத்து மென்றால், அதன் சாறுகள் உள்ளிறங்கி, இருமலை நிறுத்தும்.

வெற்றிலை சாறு, கற்பூரவல்லி சாறு இவற்றுடன் தேன் கலந்து இரண்டு (அ) மூன்று வேளை கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு வசம்பை அரைத்து தேனுடன் கொடுக்கலாம்.

சுக்கு, திப்பிலி, மிளகு, பனங்கற்கண்டு இவற்றால் செய்த கஷாயம் இருமலை போக்கும்.

கொதிக்கும் நீரில் மஞ்சள் பொடி போட்டு ஆவி பிடிக்கலாம்.

கொத்தமல்லி விதை (தனியா) யை கஷாயம் வைத்து குடித்தால் இருமல் விலகும்
 தொண்டைப்புண்

தொண்டைப்புண்களுக்கு தேன் நல்லது. தேனை வாயில் சிறிது நேரம் வைத்திருந்தால் தொண்டையில் பரவும். தொண்டையின் அழற்ச்சியை தணிக்கும். மஞ்சளும் நல்ல வீட்டு மருந்து. அரை தேக்கரண்டி மஞ்சள் பொடியை ஒரு கப் சூடான பாலில் இட்டு, சர்க்கரை சேர்த்து, தினமும் இரு வேளை பருகவும்.

அதிக அமில சுரப்பு (Acidity)

நான்கைந்து மிளகை, நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
இந்தப் பொடியை சிறிது சர்க்கரை கலந்து பாலில் சேர்த்து, தினமும் சாயங்காலம், 15 நாட்களுக்கு குடித்து வரவும்.
இளநீர் குடிக்கலாம். இளநீர் வழுக்கை (இளம் தேங்காய்) யை எடுத்துக் கொண்டால் இன்னும் நல்லது.
படுக்கும் முன் குளிர்ந்த பாலை குடிக்கலாம்.

இருமல்

எட்டு பாதாம் பருப்புகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் பாதாமின் தோல்களை அகற்றி விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன் 20 கிராம் வெண்ணெய், சர்க்கரை சேர்க்கவும். காலையிலும், மாலையிலும் இரு வேளை இந்த விழுதை சாப்பிட்டு வர இருமல் குறையும். அதுவும் உலர்ந்த இருமலுக்கு இந்த விழுது நல்ல பலன் தரும்.

நல்ல மஞ்சள் பொடி 2 கிராம் எடுத்து சூடான பாலில் (1 கப்) கரைத்து தினமும் இரு வேளைகளில், 15 நாள் குடித்து வரவும்.

துளசி சாறு 5 மி.லி. எடுத்து 10 மி.லி. தேனில் கலந்து சாப்பிடவும். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல் ஏற்படுகின்ற வாய்ப்புள்ளவர்கள், படுக்கைக்குச் செல்லுமுன் கனத்த உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பதுடன், இரவு உணவிற்கும், படுக்கைக்குச் செல்வதற்கும் இடையே குறைந்தது மூன்று மணி நேரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அஜீரணம்

அஜீரணம், அதுவும் ஜுரத்துடன் கூடிய பித்த அஜீரணத்திற்கு கடூக்கி எனும் கடுகு ரோகினி நல்ல மருந்து ஆகும்.

கடுகு ரோகினி ஜுரத்தை குறைக்கும், வயிற்றுப் பூச்சிகளை அகற்றும், இதமான மலமிளக்கி வயிற்று வலியை போக்கும்.

 கபம், சளி இல்லாத வறட்டு இருமலுக்கு, தொண்டையை முதலில் வழவழப்பாக செய்ய வேண்டும். இதற்கு ஆயுர்வேத பண்டிதர்கள் பசும் பால் மற்றும் பசு நெய்யை உபயோகிப்பதை சிபாரிசு செய்கிறார்கள்.

அதிமதுர வேர் கஷாயம் தயார் செய்து தேனுடன் குடிக்க இருமல் குறையும்.

கருமிளகு 250 லிருந்து 750 மி.கி. எடுத்து நெய், சர்க்கரை, தேனுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

துரித நிவாரணத்திற்கு கறுப்பு, உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம், கரு மிளகு, வாயு விளங்கம், வால் மிளகு, தேன் இவற்றில் சம அளவு எடுத்து குழைத்து சாப்பிடலாம்.

மஞ்சள் பொடி கலந்து சூடான பால் தொண்டைக்கு இதமானது. மஞ்சள் ஒரு கிருமி நாசினி. இந்த மஞ்சள் பொடி கலந்த பாலை 15 நாளாவது குடிக்க வேண்டும்.

துளசி சாறு 5 மி.லி. எடுத்து, 10 மி.லி. தேனில் கலந்து தினம் இரு வேளை குடித்து வந்தால் இருமல் நிற்கும். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.

ஒரு டம்ளர் பாலில் இரண்டு பூண்டு 'பல்' களை நசுக்கிப் போட்டு காய்ச்சவும். பாலின் அளவு பாதியாகும் வரை காய்ச்சவும். வடிகட்டி, இரண்டு பாகங்களாக பிரித்து, ஒரு பாகத்தை காலையிலும், மற்றொரு பாகத்தை மாலையிலும், 1 வாரம் குடிக்கவும். அதிக அமில பாதிப்பு உள்ளவர்கள் இதை தவிர்க்கவும்.

வெங்காயச் சாறு (5 மி.லி.) + தேன் (10 மி.லி.) கலந்து 10 நாட்களுக்கு காலை, மாலை இரு வேளை எடுத்துக் கொள்ளவும். தேனுக்கு பதில் வெல்லத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

"ஆவி பிடித்தல்" சளிக்கு மட்டுமல்ல, இருமலுக்கும் நல்லது. ஆவி பிடிக்கும் நீரில் மஞ்சள் பொடி சேர்த்தால் இன்னும் நல்லது. கிராம்பு தைலம் அல்லது யூகலிப்டஸ் எண்ணெய்யையும் ஆவி பிடிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளலாம்.
கற்பூர வல்லி சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும். கற்பூர வல்லி மற்றும் இதர ஆயுர்வேத மூலிகைகள் தனியே விவரிக்கப்படுகின்றன.

இதர குறிப்புகள்

இரவில் இருமல் தொல்லை (அதுவும் வறண்ட இருமல்) அதிகமாகும். இன்னொரு தலையணை வைத்து, தலையை தூக்கி படுத்துக் கொள்ளவும்.

நிறைய நீர் (சிறிது சூடான) அல்லது திரவ உணவுகளை (8 (அ) 10 டம்ளர்) குடிக்கவும்.

புகைப்பதை உடனே நிறுத்தவும்.
தேவையானவை
கானம் பயறு (கொள்ளு) - 50 கிராம்
நல்ல மிளகு- 3 தேக்கரண்டி
வெள்ளைப் புண்டு - 8 பல்
சுக்கு - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
கொள்ளுவை வாணலியில் போடடு சிறு தீயில் பொன்னிறமாக வறுக்கவும்
பின் வறுத்த கொள்ளுவை அம்மியில் (மிக்சி) போட்டு பொடி செய்து கொள்ளவும்
இதனுடன் நல்ல மிளகு, புண்டு மற்றும் சுக்கு இவற்றையும் பொடி செய்து கொள்ளவும்
பின் அடுப்பில் வாணலியை வைத்து இவற்றை அதில் போடடு தேவையான அளவு தண்ணீர் (2 டம்ளர்) சேர்த்து
தேவையான அளவு உப்பு சோ்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

பின் இம்மருந்தை சற்று சுடாக குடிக்கவும். இரண்டு நாள் தொடர்ந்து குடித்தால் வறட்டு இருமல் என்ன எந்த இருமலும் காணாமல் போய்விடும். செய்து பாருங்கள்
‘‘துளசி, தூதுவளை, கற்பூரவல்லி இவற்றை அலம்பி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேன் கலந்து குடித்தால் உடம்பு வலி, சளி, இருமல் எல்லாம் போயே போய்விடும். உடம்பிற்கு ஒரு புத்துணர்ச்சி வந்ததுபோல இருக்கும்’’ வாரம் ஒரு முறை இதைக் குடித்தால் இருமல், சளி நம்மை அண்டவே அன்டாது.


இரவு படுக்கப்போகும் முன் ஒரு தம்ளர் சூடான பாலில் சிறிது மஞ்சள் பொடி, சிறிது மிளகுப் பொடி போட்டுக் குடிக்கலாம் என்ற குறிப்பின் படி செய்ய ஆரம்பித்தேன். வறட்டு இருமல் போயே போச்!

ஒரு தம்ளர் நீரைக் கொதிக்க வைத்து அதில் ஒரு மேசைக்கரண்டி தேன் கலந்து ½ மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து சாப்பிடுங்கள். ஜலதோஷம்? இட்ஸ் கான்!


செய்முறை: ½ அங்குலத் துண்டு இஞ்சியை சின்னச்சின்ன துண்டுகளாக நறுக்கி ஒரு தம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும். இந்தத் தண்ணீரை வடிகட்டி ஒரு மேசைக்கரண்டி தேன் விட்டு நன்றாகக் கலக்கிக் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை சாப்பிடவும். ஜலதோஷம்? போயே போச்!

பட்டை, மிளகு மற்றும் தேன் இவை நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தவை. இவை எப்போதும் உங்கள் சமையலறையில் இருக்கட்டும். ஒரு தம்ளர் நீரில் சில பட்டை துண்டுகள் போட்டுக் கொதிக்க விடவும்.இதனுடன் 2 தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை மிளகுத்தூள் போட்டுக் குடிப்பதும் ஜலதோஷத்திற்கு நல்லது.

தலைவலிக்கு:

எலுமிச்சம் பழ சாறு கலந்த கருப்பு டீ மிக நல்லது.  இது மூளையின் நரம்புகளைத் தளர்த்தி தலைவலியை குறைக்கிறது. ஒரு கப் தேநீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். தலைவலி………… gone!

வறட்டு இருமலுக்கு:

உலர்ந்த திராட்சை சாறு தொண்டையில் ஏற்படும் தொற்றுக்கு உடனடி நிவாரணம் கொடுக்கும்.

50 கிராம் உலர்ந்த திராட்சையைத்  தண்ணீர் விட்டு அரைக்கவும். அத்துடன் 50 கிராம் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கெட்டியாக (சாஸ் போல) ஆகும் வரை கொதிக்க விடவும். தினமும் ஒரு மேசைக்கரண்டி அளவு சாப்பிட்டு வரலாம்.

அஜீரணம், வாயுத்தொல்லை இவற்றிற்கு வெள்ளைப் பூண்டு சேர்த்த பால் நல்ல நிவாரணம் கொடுக்கும்.

செய்முறை: 2 பூண்டுப் பற்கள் எடுத்து நன்றாக தட்டி சற்று சூடான பாலில் கலந்து குடிக்கவும்.

இன்னொரு வீட்டு வைத்தியம் அஜீரணத்திற்கு:

சோம்பை  நன்கு வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். இரவு படுக்கப் போகும் முன் ஒரு தம்ளர் கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டியளவு சோம்புப் பொடியைப் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் இந்த நீரை வடிகட்டிவிட்டு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிடவும்.

இன்னொரு முறை: இஞ்சி, சீரகம், சோம்பு, மிளகு இவற்றை பொடி செய்து கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை கொதி நீரில் போட்டு வடிகட்டி தேன் விட்டு சாப்பிட அஜீரணம் மறையும்.

அசிடிடி குறைய ஷாஜீரா உதவும். இந்த விதைகளில் இருக்கும் எண்ணையில் ஜீரணத்தைத் தூண்டும் முக்கியமான பொருட்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்ட் (anti-oxident) பொருட்களும் உள்ளன. இவை ஜீரணத்தை அதிகரித்து வாயு சேர்வதையும் அசிடிடியையும் குறைக்கிறது.

ஒரு தம்ளர் நீரில் ஷாஜீரா ½ தேக்கரண்டி சேர்த்துக் கொதிக்க விடவும். சிறிய தீயில் 10 நிமிடங்கள் வைக்கவும். தினமும் 2, 3 முறை சற்று சுட வைத்துப் பருகவும்.

மாத விலக்கு சமயத்தில் வரும் வயிற்று வலிக்கு:

இஞ்சியை நன்கு அலம்பி தோல் சீவிவிட்டு தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும். இதனுடன் சிறிது வெல்லம் சேர்க்கவும். ஒரு பத்து நிமிடங்கள் கொதித்த பின் அடுப்பை அணைக்கவும். சற்று சூட இருக்கும்போது ஒரு தேக்கரண்டி அல்லது இரண்டு தேக்கரண்டியளவு அளவு சாப்பிடவும். உடனடி நிவாரணி இது.


அசிடிட்டி நோய்க்கு அரிசி:

    பச்சை அரிசி 8 அல்லது 10 மணிகளை எடுத்துக் கொண்டு தினமும் காலையில் காலை சிற்றுண்டி சாப்பிடுவதற்கு முன் நீருடன் விழுங்கவும்.
    21 நாளைக்கு விடாமல் தொடர்ந்து செய்ய மூன்று மாதத்தில் அசிடிட்டி உங்களை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடும்.
    இந்த சிகிச்சை முறையால் உடலில் இருக்கும் ஆசிட் அளவு நாளடைவில் குறைந்து விடும்.

கொலஸ்ட்ரால் குறைய கொட்டைப்பாக்கு

உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இவற்றுடன் கூட வரும் கொலஸ்ட்ரால் குறைய இதோ ஒரு வீட்டு வைத்தியம்:

    வாசனை சேர்க்காத கொட்டைப் பாக்கை சிறு சிறு துண்டுகளாக்கி ஒவ்வொரு சாப்பாட்டிற்கு பிறகு 20-40 நிமிடங்கள் வாயில் போட்டு மெல்லவும்.
    கடிக்க வேண்டாம்; நன்றாக மென்றவுடன் பாக்கை வெளியே துப்பி விடுங்கள்.
    பாக்கிலிருந்து வரும் ஜூஸ் உமிழ் நீருடன் கலந்து இரத்தத்தின் கொழுப்பை குறைக்கிறது.  இரத்த ஓட்டம் சீராகிறது; இரத்த அழுத்தமும் குறைகிறது.

உயர் இரத்த அழுத்தத்திற்கு மெந்தியம்:

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க மெந்தியம் மிகச் சிறந்த மருந்தாகக் கருதப் படுகிறது.

    8-10 மெந்திய மணிகளை எடுத்துக் கொள்ளவும்;
    தினமும் காலையில் சிற்றுண்டிக்கு முன் தண்ணீருடன் விழுங்கவும்.

சர்க்கரை நோய்க்கு 2 வைத்திய முறைகள்:

முதல் முறை: black tea எனப்படும் பால் கலக்காத தேனீர்

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு முதலில் பாதிக்கப் படும் உறுப்பு சிறுநீரகம் தான். இவர்கள் தினமும் காலையில் கறுப்பு தேனீர் குடிக்கலாம்.

    தேயிலைகளை தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும்.
    பாலோ, சர்க்கரையோ, எலுமிச்சம் சாரோ சேர்க்காமல் குடிக்கவும்.
    சிறுநீரகத்தின் செயல் பாட்டை சரி செய்யும் சக்தி இந்தக் கறுப்பு தேனிருக்கு உண்டு.

இரண்டாவது சிகிச்சை:

    இளம் வெண்டைக்காயை காம்பை நீக்கி விட்டு நீள வாக்கில் அரிந்து கொள்ளவும்.
    இரவு தண்ணீரில் ஊறப் போடவும்.
    காலை சிற்றுண்டிக்கு முன் வெண்டைக்காய் ஊறிய தண்ணீரை குடித்து விடவும்.  வெண்டைக்காய் ஊறியதால் தண்ணீர் சிறிது கொழ கொழப்பாக இருக்கும். இந்தக் கொழ கொழுப்பு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வரும்.
    ஊறிய வெண்டைக்காயையும் அப்படியே சாப்பிட்டு விடலாம்.

பொதுவான சில வீட்டு வைத்தியங்கள்:

    நடு இரவில் சில சமயம் வாயுத் தொல்லையினால் வயிற்று வலி வரும். சூடான நீர் சாப்பிடுவது வாயுவை வெளியேற்றுவதுடன், வலியையும் குறைக்கும்.
    ஜலதோஷம் பிடிக்கும் அறிகுறிகள் தோன்றுகிறதா? தண்ணீரில் ஒரு ஸ்பூன் மிளகு போட்டு கொதிக்க வைத்துக் அவ்வப்போது குடித்து வர ஜலதோஷம் உங்களைப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

இந்தக் குறிப்புகளின் பலன்கள் மருத்துவ ஆராய்ச்சி மூலம் நிருபிக்கப் படவில்லை என்றாலும், இவை எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை என்பது நிஜத்திலும் நிஜம்.அருமருந்தான அருகம் புல்....
இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டி செய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும்.

பல் ஈறு நோய்களுக்கு.....
எலுமிச்சம் பழச்சாறு அரை பாகம், தக்காளிப் பழச்சாறு ஒரு பாகம். சுத்தமான தேன் கால் பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகவும், பலம் பெறவும் உதவும். நல்ல காபிப்பொடியில் தயாரிக்கப்பட்ட காபியில் குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு உடனே சாப்பிட்டு விடவேண்டும். இவ்வாறு மூன்று தினங்கள் செய்தால் தீராத தலை வலி நீங்கும். பல் ஈறுகளில் ஏற்படும் பல் வலிக்கும் ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும் எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளுக்கு சாப்பிட்டும், பல், ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால் மேற்கண்ட நோய்கள் தீரும்.
எலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் சுத்தமான தண்ணீ­ர் சமஅளவு கலந்து 60 மில்லியளவில் நான்கு மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு உடனே நீங்கும். எலுமிச்சம்பழச் சாறு 1 லிட்டருக்கு 1.5 கிலோ சீனி சேர்த்து சர்பத் தயாரித்து தினமும் 15 மில்லிக்குக் குறையாமல் சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும். நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சைப் பழத்தில் துளையிட்டு, விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.
கருத்தரிக்க உதவும்...
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50லிருந்து 100 கிராம் வரை எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
உதடு வெடிப்புக்கு...  
 
சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.
இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.
வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

கட்டி கரைய....
கடுக்காய், சிவப்பு சந்தனம் ரெண்டயும் தண்ணி விட்டு அரைச்சு குழம்பு போல ஆக்கி கட்டிமேல பூசிக்கிட்டு வா.. கட்டி தானாக் கரைஞ்சிடும்.


தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும். குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்­ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும். குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும். அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்.


குங்குமப் பூவில் போலி நிறைய உண்டு. தேங்காய் துருவலில் வண்ணச்சாயத்தை ஏற்றி, காய வைத்து சிறிது 'saffron' essence கலந்து விற்கிறார்கள். அவை மலிவாக கிடைக்கும். தரமான குங்குமப்பூ ஒரு கிராம் விலை சுமார் ரூ. 500 இருக்கும். உண்மையான குங்குமப்பூவைத் தேர்வு செய்து வாங்கிப் பயனடையுங்கள்!
நோய் எதிர்ப்பு சக்திக்கு......
கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் 'ஏ' அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், இந்த கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.
முதுமை தோற்றத்தைக் கட்டுப்படுத்தும். கண்பார்வை கூர்மையடையும். பல் நோய்கள் வராமல் தடுக்கும். கீரையுடன் பருப்பு மட்டும் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. பல கொடிய வியாதிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங்கண்ணிக் கீரையாகும்.
உடற்சூட்டுக்கு.........
வெந்தயம் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனால் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ உடற் சூடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். மோரில் வெந்தயத்தை போட்டு 10 நிமிடம் விட்டு சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணிந்து விடும். ஒவ்வொரு நாளும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தூளாக்கியோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள சர்க்கரையினளவு கட்டுப்படுத்தப்படும்.
குறிப்பாக நீரிழிவு நோயுள்ளவர்கள் வெறும் வயிற்றில் இந்த வெந்தயத்தை தண்ணீ­ரில் ஊறவைத்து காலையில் பருகி வர நல்ல மாற்றம் கிட்டும். பொதுவாக பாலூட்டும் தாய்மாருக்கு பால் நன்றாக சுரக்க வறுத்த வெந்தயத்தை இடித்துக் கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் வயிற்றுப் போக்கு இருப்பின் அதற்கும் வெந்தயம் சிறந்த மருந்து. பெண்களுக்கு மாதவிடாயின் போது வெந்தயம் கொடுத்தால் நன்மை பயக்கும். இவற்றோடு காய்ச்சல், சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கும் நிவாரணியாகக் காணப்படுகின்றது இந்த வெந்தயம். மேலும் தலைக்கு வைக்கும் எண்ணெய்க்குள் வறுத்தோ அல்லது சாதாரணமாகவோ வெந்தயத்தை போட்டுவைத்துக் கொண்டால் அது நல்ல குளிர்ச்சியைத் தரும். மொத்தத்தில் வெந்தயம் என்பது நன்மை தரும் பொருளாகக் காணப்படுகின்றது.
பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. தலை முடி கொட்டுவதை நிறுத்த, வெந்தயத்தை தண்­ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போல அரைத்து, தலையில் தேய்த்து, அரைமணி நேரம ஊற வைத்து குளிக்க வேண்டும்.
ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு.....!
கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர். அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில.......

  * குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.
* கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
* தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.
* உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.
* இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.
* பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.
* பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.
* பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.
தெரிந்துகொள்வோமா....
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும்.
* வாழைப்பழங்களில் சோடியம், கால்ஷியம், பொட்டாஷியம் போன்ற பலவகைச் சத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் இருதய அழுத்தம் ஏறாமல் சீராக நடைபெற்று வரும்.
* தேங்காய் பயன்படுத்தும் உணவுகளில் கூடிய வரை தேங்காயைக் குறைத்துக் கொண்டு, டோஃபு எனப்படுகிற சோயா பனீரை சேர்க்கலாம். கொழுப்புச் சத்து அதிகமுள்ளவர்களுக்கும், இதயப் பாதிப்பு உள்ளவர்களுக்கும், எடை குறைக்க நினைப்போருக்கும் ஏற்றது இந்த டோஃபு.
* லவங்கப்பட்டை சேர்த்துக் கொதிக்க வைத்த தண்­ணீரை பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டு, தினம் ஒரு முறை வாய் கொப்பளிக்கலாம். இயற்கையான மவுத் வாஷான இது, வாய் நாற்றத்தைக் தவிர்க்கும்.
* குழந்தைக்கு மார்பிள் சளி கட்டிக்கொண்டால், வெற்றிலையில் தேங்காய் எண்ணையைத் தடவி விளக்கில் சூடுபடுத்தி இளம் சூட்டில் மார்பில் பற்றுப்போடலாம். சளி கரைஞ்சிடும். சில குழந்தைகளுக்கு தலையில் சூடு இருக்கும். இதுக்கு குங்குமப்பூவை அரைச்சு பத்துப் போடலாம்.
* தினம் ஒரு கேரட்டை பச்சையாக கடிச்சி சாப்பிட்டால் வாத நோய் ஏற்படற வாய்ப்பு 68 சதவீதம் தவிர்க்கப்படுகிறது.

* வேலைக்கு போற பெண்கள் சிலர் அவசரத்துல சாப்பிடக்கூட மாட்டார்கள்... அந்த மாதியான பெண்கள் காபி குடிக்கிற டம்ளர்ல ஒரு டம்ளர் கேப்பைக்கூழ் குடிச்சிட்டுப்போகலாம். பசி அடங்குவதோடு உடம்புக்கு சத்தையும் தரக்கூடியது கேப்பைகூல்.
பித்தவெடிப்பு மறைய
காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
தொண்டை வலிக்கு
பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.
இருமல் தொல்லைக்கு
தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.
இருமல் சளிக்கு
தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.


கட்டிகள் உடைய
மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.
பேன் தொல்லை நீங்க
வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.
மேனி பளபளப்பு பெற
ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.


தும்மல் வராமல் இருக்க
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.
கரும்புள்ளி மறைய
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
தொண்டை கரகரப்பு நீங்க
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.
கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
இருமல் சளி குணமாக
சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

கொய்யாப்பழத்தில் சத்து உள்ளது என்பதுபோல் அதன் இலையிலும் மருத்துவத்தன்மை உள்ளது என்று எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியாது.  வயிற்றுப்போக்கை நிறுத்துவதில் ஆற்றல் படைத்தது கொய்யா இலை என்றால் அது மிகையல்ல........
* கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்­ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
* பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
* சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
* குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
* காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
* வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாற்றை அருந்தினால் பித்த மயக்கம், வாந்தி, கண்ணோய், இரத்த சோகையால் ஏற்பட்ட சோர்வு முதலியவை நீங்கும். உடலுக்கு புத்துணர்வை தரும். நன்கு பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும். எலுமிச்சம் சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால் மனநோய், மன அழுத்தம் நீங்கும். உடலில் தேய்த்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட சில வியாதிகள் குணமடையும். நகச்சுற்றுக்கு இதன் சாறே சிறந்த மருந்து. யானைக்கால் வியாதி, கண்ணோய், காதுவலிக்கும் எலுமிச்சை சாறு சிறந்த மருந்து.

இஞ்சி சாறு:
நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என்றார்கள். இம்மூன்றையும் தினமும் உட்கொண்டால் நோய் என்பதே நம்மை நெருங்காது.

இஞ்சியை சாறு எடுத்து சிறிதளவு தினமும் அருந்தினால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி, குடல்நோய், பித்த மயக்கம், போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது உற்ற மருந்தாகும். மேலும் தொண்டைப்புண், குரல் கம்மல், இவைகளைக் குணப்படுத்தும்.

கரிசலாங்கண்ணிச் சாறு:
கரிசலாங்கண்ணிச் சாறு ஜலதோஷம், காய்ச்சல், உடல்வலி, விஷக்கடி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் போன்றவற்றை குணப்படுத்தும். இதன் சாறை காலையில் அருந்துவது நல்லது. அல்லது மதிய உணவுக்குப்பின் சூப் செய்து அருந்தலாம்.

பொன்னாங்கண்ணிச் சாறு:
பொன்னாங்கண்ணி பல வகையான தைல வர்க்கத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த பொன்னாங்கண்ணி கீரையை சூப் செய்து காலை மாலை இருவேளை என 15 நாட்களுக்கு அருந்தி வந்தால் கண் நோய்கள் ஏதும் அண்டாது. உடலின் வெப்பத்தைக் குறைத்து உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.

தூதுவளைச் சாறு:
வறட்டு இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைப்புண், அடிக்கடி ஜலதோஷம் உள்ளவர்கள் தூதுவளைச் சாறு அருந்தி வந்தால் சளித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

அருகம்புல் சாறு:
அருகம்புல் சாறானது இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் உடலுக்கும் புத்துணர்வை கொடுக்கிறது. உடலில் தேங்கியுள்ள அசுத்த நீர் அனைத்தையும் வெளியேற்றுகிறது.

தண்­ணீர் விட்டான் கிழங்கு சாறு:
தண்ணீ­ர் விட்டான் கிழங்கின் சாறை எடுத்து தினமும் காலையில் அருந்தி வந்தால் உடல் சூட்டை தணித்து பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலைத் தடுக்கும். தாது புஷ்டியை கொடுக்கும்.
பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.
வெள்ளைப் பூண்டு சாறு:
வெள்ளைப் பூண்டு சாற்றை காதில் இரண்டு சொட்டு விட்டால் காது மந்தம் குறையும். உள்நாக்கில் தடவினால் உள்நாக்கு வளர்ச்சி (டான்சில்) குறையும். மேலும் சிறிது அருந்தினால் இருமல், சுவாசம் அடைப்பு, மலக்கிருமிகள் நீங்கும். உடலின் மேல் சுளுக்கு ஏற்பட்ட பகுதிகளிலும் தடவலாம்.

வெற்றிலைச் சாறு:
வாத பித்த கபத்தினை அதனதன் நிலையில் சமப்படுத்த வெற்றிலைச் சாறு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும். காணாக்கடிகளுக்கு இதன் சாறு சிறந்த மருந்து. அஜீரணத்தைப் போக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.

வேலிப்பருத்தி சாறு:
சுவாசம், காச நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். கருப்பையிலுண்டாகும் பக்க சூலைக்கு இதன் சாறு தேன் கலந்து கொடுத்தால் பக்க சூலை நீங்கும். கை கால் வீக்கங்களுக்கு மேல் பூச்சாகத் தடவலாம்.

குரல் மாற்றத்தை சரிசெய்ய:
கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிகொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும்.

தொண்டைப் புண் ஆற:
வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும். அல்லது கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் ஆறும்.

தொண்டை நோய்:
மாதுளம் பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேனும் கலந்து சாப்பிட தொண்டை நோய் அகலும்.

தொண்டை கரகரப்பு குணமாக:
சுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். அல்லது பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்
.
தொண்டைக் கட்டு குணமாக:
மாவிலை, பச்சை இலையை நெருப்பில் போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால் தொண்டைக்கட்டு குணமாகும். அல்லது மாவிலையை தேன் விட்டு வதக்கி நீரில் கலந்து அருந்த தொண்டைக்கட்டு, குரல் கமறல் தீரும்.

தொண்டை சதை வளர்ச்சி குறைய:
வில்வ இலை சாறு, துளசி இலை சாறு 100 வீதம் எடுத்து நல்லெண்ணை 500 மில்லியில் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி பாட்டிலில் வைக்கவும். தினசரி ஒரு கரண்டி எண்ணை எடுத்து வாயில் விட்டு சில நிமிஷங்கள் வாய் முழுவதும் ஒதுக்கி பின் கொப்பளிக்கவும். 10 தினங்கள் கொப்பளிக்க குணம் தெரியும்.

தொண்டை சதை குணமாக:
புளியையும், உப்பையும் சமஅளவு எடுத்து மைய அரைத்து நாக்கில் தடவிவர குணமாகும். அல்லது துளசி தைலத்தை அரைத் தேக்கரண்டி வாயிலிட்டு தொண்டை வரை கொப்பளித்து வர குணம் தெரியும்.

ஈறுகளில் ரத்தக்கசிவு குணமாக:
இலந்தை மரத்தின் கொழுந்துகளை பறித்து நீரில் காய்ச்சி சிறிது உப்பு சேர்த்து அந்நீரை வாய் கொப்பளிக்க ஈறுகளில் வரும் இரத்தக்கசிவு நிற்கு

இலந்தைப்பழம்:
சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டைதான் அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும்
இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப்பழத்தில் வைட்டமின் 'ஏ' சத்தும் சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் பெறவும் இலந்தைப்பழம் உதவிபுரிகிறது. இது உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும். தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். அடிக்கடி வாந்தி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.

களாப்பழம்:
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் களாப்பழம் கருநிறத்துடன் முட்டை வடிவத்தில் காணப்படும். களாக்காயாக இருக்கும்போது ஊறுகாய் போட பயன்படுகிறது. இது புளிப்புச் சுவையுடன் காணப்படும்.
நன்றாக கனிந்த களாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது. இதில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை களாப்பழத்திற்கு உண்டு. உணவு உண்டபின் இந்த பழம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகி நன்றாக பசியெடுக்கும். உடல் உஷ்ணம் காரணமாக தொண்டையில் ஏற்படும் வலியை களாப்பழம் குணப்படுத்துகிறது. உடல் சூட்டினை சமன்படுத்தும் தன்மை களாப்பழத்திற்கு அதிகம் உண்டு.

ஆல்பக்கோடா பழம்:
தமிழ் நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் 'ஏ', 'பி' உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. இது உடலுக்குப் பலத்தைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.

காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும். வாய்க்கசப்பைப் போக்கும். நாவறட்சி மாறும். வாந்தியை நிறுத்தும். தலைவலியை குணப்படுத்தும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் சொரி, சிரங்கு உடனடியாக குணமடையும்.
வேப்பம்பழம்:

வேப்ப மரத்தின் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. நன்றாக முற்றி மரத்திலிருந்து தானாகவே கீழே விழும். பழங்கள் நன்றாக இனிப்பாக இருக்கும்.

வேப்பம் பழம் பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது. எந்த நோயும் வராமல் பாதுகாக்கும். இது பித்தத்தை தணிக்கும். சொரி, சிரங்கு மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தும்.
பழம் உதிரும் சீசனில் நன்றாக கனிந்த பழங்களை சேகரித்து அதை நீர் விட்டு கழுவி தோலையும், கொட்டையும் எடுத்துவிட்டு சுத்தமான துணியில் வடிகட்டி எடுக்கவும். எந்த அளவிற்கு பழச்சாறு இருக்கிறதோ அந்த அளவிற்குச் சர்க்கரையைச் சேர்த்து சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு, அதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். பாகுபதம் வந்த சமயம் இறக்கி வைத்து ஆறிய பின் பாட்டிலில் ஊற்றிவைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான வியாதிகள் குணமடையும். பித்தம் தொடர்பான நோய் தீரும்.

No comments:

Post a Comment