Wednesday, March 19, 2014

உடல் பருமன் குறைக்க

1. யேசிக்காமால் உண்பதை நிறுத்துதல்: அடிக்கடி சிப்ஸ் சாப்பிடுதல். காரணம் இன்றிச் சாப்பிடுதல் அல்லது அந்தப் பழக்கத்தை திரும்பத் திரும்பச் செய்து உடலுக்கு அதை ஒரு நிரந்தரப்

பழக்கமாக்கிக்கொள்தலைத் தவிர்த்தல் மிக மிகவும் உங்கள் உடலுக்குச் சிறந்தது. இப்பழக்கத்தில் இருந்து எப்படி வெளியேறலாம்? மிக இலகுவானமுறை சாப்பிடும்போது அதை என்ன நேரம் என்ன

சாப்பிட்டதென்பதை நீங்கள் பார்க்கக் கூடிய இடத்தில் எழுதிவைத்தல், எழுதிவைத்ததில் கவனத்தைக் குவித்தல். இம் முறையை நீங்கள் கடைப்பிடித்தால் அது எடையைக் குறைப்பதற்கான சிறந்த முறையென

பல ஆராய்ச்சிகள் நிருபித்திருப்பதாக கூறப்படுகின்றன.

2. நாள் முழுவதுமே எப்படியாவது அசைந்து கொண்டிருங்கள். இது வீட்டில் இருப்பவர்களுக்கு இலகு. காரியாலங்களில் தொடர்ந்து இருந்து பணியாற்றுபவர்கள் அடிக்கடி தமது உடலை அசைத்தல் மிக நன்று.

நாற்காலியை விட்டு எழும்பும் போதெல்லாம் உடலை அங்கும் இங்குமான திருப்புதல், அமர்ந்திருக்கும்போது கூட தன் கால் பெருவிரலை நிலத்தில் படும்படி வைத்துக் குதிக்காலை உயர்த்துதல், சந்தர்ப்பம்

கிடைக்கும்போதெல்லாம் சிறிதளவு தூரமானலும் நடத்தல், இவற்றை அடிக்கடி செய்தல் மிக மிகச் சிறந்தமுறை.

3. தண்ணீர் குடித்தல்: நாம் தினமும் உண்ணும் உணவில் கணிசமான அளவு ‘ரொக்சின்’ இருப்பது நமக்கு நன்றாகவே தெரியும். நாம் அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம் அந்த நஞ்சுத் தன்மைகளை நமது உடலில்

இருந்து வெளியேற்றலாம். தேவையற்ற கொழுப்புப் பொருட்கள் கூட கரைவதற்கு தண்ணீர் உதவி செய்வதாக ஆராய்சிகள் தெரிவிக்கின்றன. முடிந்தால் சுடுநீர் குடிப்பது மிக மிக நன்று. சில கலாச்சாரத்தை

கடைப்பிடிக்கும் மக்கள் இவ்வாறு செய்வதை நாம் அவதானிக்க முடிகின்றதல்லவா?

3. சிறு சிறு தூரமான இடங்களுக்கு செல்லும்போது நடந்து செல்ல முயற்சியுங்கள். நடக்கும்போது அதிகமான பிராணவாயு உடம்பிற்குள் செல்வதால் அது அதிகமான கொழுப்பை கரைப்பதால் உங்களுக்கு உடல்

எடை குறைவது மட்டுமல்ல அதிகமான சக்தியும் கிடைக்கின்றது. அத்துடன் கிடைக்கின்ற நேரங்களில் நின்ற இடத்தில் நடத்தல். ஜோக்கிங் என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். எப்பொழுதெல்லாம் முடிகின்றதோ

அப்பொழுது செய்தல். நீண்ட நேரம் செய்யவேண்டும் என்பதலல முக்கியம். செய்து பார்த்தால்தான் உங்களால் அதன் பயன்பாடுபற்றி அனுபவபூர்வமாக உணர முடியும்.

4. உணவின் கலோரிசை மெதுமெதுவாகக் குறைத்தல். உங்கள் உணவில் அதமான அளவிற்கு நார்சத்தான உணவுகள், அதிகளவு புரோட்டின் உள்ள உணவுகள், என்பற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

எண்ணற்ற வகையான உணவுப் பொருட்களை நாம் பெறக் கூடியநாடு நம் கனடா. குறிப்பாக பொரித்த உணவுகள், டோனட்ஸ், பேக்கிள்ஸ், சிப்ஸ், உருளைக்கிழங்கு பொரியல், என்பவை கலோரிஸ் கூடியவை

மட்டுமல்ல உடல் எடையை இலகுவாகக் கூட்டும் தன்மை கொண்டவை. குறிப்பாக எந்தக்கடையாயினும் கடையில் தயாரிக்கப்பட்ட எந்த உணவுப் பொருட்களும் உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும்

என்பது தவறான கருத்தாகும். தவிர்த்துப்பார்த்தால் உண்மை புரியும்.

5. அதிகமான அளவில் பலதரப்பட்ட காய்கறிவகைளை உணவில் சேர்த்துக் கொள்ளல் மூலம் உடலில் இருந்து ரொக்சினை அகற்றலாம். ஸ்நெக் தேவையாக இருந்தால் பழங்களை உட் கொள்ளல் மூலம் உங்கள்

உடலுக்குத் தேவையான சகல விதமான ஊட்டச்சத்துக்களை இலகுவில் பெற்றுக்கொள்ளலாம். அது மட்டுமல்ல அதிகமான சக்தி கிடைக்கும்போது களைப்பு என்பது விரட்டியடிக்கப்படுவதை உணர்வீர்கள்.

No comments:

Post a Comment