Saturday, March 22, 2014

வாழைத்தண்டு சூப்

தேவையானவை:
  • இளம் வாழைத்தண்டு – 2
  • பார்லி – 50கிராம்
  • மிளகுப்பொடி – 4 ஸ்பூன்
  • எலுமிச்சம்பழச்சாறு – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • பால் – 1/2 கப்

செய்முறை:

  • வாழைத்தண்டைத் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜுஸ் பிழிந்து ​ வடிகட்டிக் கொள்ளவும்.
  • பார்லியை இளம் சிவப்பாக வறுத்துப் பொடியாக்கவும்.
  • அரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.
  • வாழைத் தண்டு சாறில் பார்லி மாவைக் கலந்து கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • பின் இறக்கி வைத்து மிளகுப் பொடி உப்பு,​ எலுமிச்சம்பழச்சாறு மற்றும் பால் சேர்த்து சூடாக அருந்தவும்.

குறிப்பு:
  • வாழைத்தண்டை பச்சை சாறாக அருந்த பலருக்கும் பிடிக்காது.
  • அதனால் இப்படிச் செய்வதால் பிடித்தமான உணவும் ஆகிவிடுகிறது!
  • வாழைத்தண்டு சாறு பச்சையாக அருந்தினால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. சளி பிடித்துவிடும். இப்படிச் சூப்பாக அருந்தும்போது விருப்பமாகவும் இருக்கும்.
  • சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தப்பைக் கற்களுக்கு அருமையான மருந்து.
  • உடலில் உள்ள கெட்டக் கொழுப்பைக் குறைத்து உடல் எடையையும் குறைக்க​ செய்யும்.
  • அருமையான மருத்துவ உணவு!

No comments:

Post a Comment