Thursday, March 20, 2014

கொழுப்பு குறைய

. உடற்பருமன் ஏற்பட்டு விட்டதா? ஆமனக்குச் செடி வேரைக் கொண்டுவந்து, நன்றாகப் பொடித்து, அத்துடன் தேனைக் கூட்டிப் பிசைந்து, ஒரு டம்ளர் தண்ணீரில் அப்படியே ஊறவைத்து விடுங்கள். இரவு முழுவதும் ஊறினதும், காலையில் கலக்கி வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். நாலு வாரத்திற்குள் நல்ல பயன் தெரியும்.

2. பொன்னாங்கன்னிக் கீரையைத் துவரம் பருப்புடன் மிளகு சேர்த்து சமைத்து உண்டு வந்தால், 3 மாதங்களில், பெருத்த உடல் பருமன் குறைந்து, நல்ல கெட்டியடைந்து ஆரோக்கியமடையும். நல்ல தேஜஸும், வீரிய விருத்தியும் உண்டாகும். நேத்திர ரோகமும் விலகும்.

3. தூல சரீரம் கறைந்து கெட்டிப்பட நில ஆவாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி, துணியில் சலித்து, ஒரு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு, தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் போதும் தன்னில் தானே, உடல் வற்றிக் கெட்டிப் படும்.

4. பச்சை வாழைத் தண்டை நறுக்கி, அதில் எழுமிச்சைச் சாற்றினைக் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறையும்.

5. காலையில் எலுமிச்சைப் பழச் சாற்றை உப்பு சேர்த்துக் கலந்து, ஒரு மாதம் வரை வெறும் வயற்றில் அருந்தினால், தேவையற்ற கொழுப்புச் சத்தும், ஊளைச் சதையும் குறையும். ரத்தமும் சுத்தப்படும்.

6. அகில் கட்டையை பசும்பால் விட்டு சந்தனம் அரைப்பது போல அரைத்து, அதை உடம்பில் பூசிகொள்ள, உடல் தளர்ந்து சதையெல்லாம் தொள தொள என்று ஆட்டும். தொண்டு கிழவர்களின் தசை னார்கள் கெட்டிப்படும்.

7. கொழுப்பு உணவையும், அரிசி உணவையும் குறைத்துக்கொண்டு தினம் எழுமிச்சம்பழச் சாறு 1 அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ், தண்ணீர் ௪ அவுன்ஸ், மூன்றையும் கலந்து, சிறிது சூடு செய்து, கலையில் ஒரு வேளைமட்டும் சாப்பிட்டு வர, எடை குறையும்.

No comments:

Post a Comment