Thursday, March 20, 2014

கிச்சடி



கிச்சடி - முக்கியமாக பயத்தம் பருப்பும், அரிசி கலந்த உணவு கூட சேர்க்கப்படும் பல வகை மூலிகைகளும் வாசனை திரவியங்களும் கிச்சடியை மருந்து உணவாக மாற்றுகின்றன. ஆயுர்வேத சிகிச்சையில் கிச்சடி பத்திய உணவாக பரிந்துரைகப்படுகிறது. காரணம் சுலபமாக ஜீரணமாகும், சுலபமாக உட்கிரகிக்கப்படும். எந்த தோஷத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கிச்சடியை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குறிப்பாக வாத தோஷம் உள்ளவர்களுக்கு கிச்சடி மிகவும் ஏற்றது.

தேவை

பாஸ்மதி அரிசி                               - 3/4 கப்
உடைத்த பயத்தம் பருப்பு           - 1/2 கப்
நெய் / நல்லெண்ணெய்               - 1/2 டே. ஸ்பூன்
ஜீரகம்                                                  - 1 டீஸ்பூன்
கடுகு                                                    - 1 டீஸ்பூன்
பெருங்காயம்                                   - 1/4 டீஸ்பூன்
இஞ்சி (துண்டு செய்து)                 - 1/2 இன்ச்
மஞ்சள் பொடி                                  - 1/2 டீஸ்பூன்
உப்பு                                                     - 1/2 டீஸ்பூன்
மிளகாய்பொடி                                - 1/2 டீஸ்பூன்
தண்ணீர்                                            - 4 - 6 கப்

(மசித்த கிச்சடி தேவையா (அ) உதிரியான கிச்சடி தேவையா என்பதை பொருத்து)

செய்முறை

அரிசியையும், பருப்பையும் நன்கு கழுவவும். கலந்து வைக்கவும்.

அடிகனமுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் / எண்ணெய்யை காய்ச்சவும். எண்ணெய் அல்லது நெய் காய்ந்தவுடன் பெருங்காயம், ஜீரகம், கடுகு சேர்க்கவும்.

இவை வெடித்தவுடன் இஞ்சியை சேர்க்கவும். அரை நிமிடம் வதக்கவும்.

அரிசி, பயத்தம்பருப்பு, மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப்பொடி சேர்க்கவும்.

நன்றாகக் கலக்கவும்.

தண்ணீரை சேர்க்கவும். பாத்திரத்தை மூடி தீயைக் குறைத்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். முப்பது நிமிடம் வேகவிடவும்.

தீயை அணைத்து ஐந்து நிமிடங்கள் கிச்சடியை அப்படியே வைக்கவும்.

ப்ரஷர் குக்கரை உபயோகப்படுத்தினால் கிச்சடியை 1 விசில் வரும் வரை வேக விடவும். குக்கரை குளிர விடவும்.

கிச்சடியை ஸ்பூனால் மெதுவாக கிளறி சிறிது நெய் விட்டு பரிமாறவும்.

No comments:

Post a Comment