Saturday, March 22, 2014

பூசணிக்காய் ஜூஸ்

தேவையான பொருட்கள் :

வெள்ளை பூசணி - ஒரு துண்டு
லெமன் ஜூஸ் - 2 ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு

செய்முறை :

• இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்

• வெள்ளை பூசணியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் இஞ்சி போட்டு நைசாக அரைத்து வடிகட்டவும்.

• இதனுடன் தேன், லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலந்து குளிர வைத்து பருகவும்.

• நீர் கடுப்பை நீக்கும் பானம் இது.

சுரைக்காய் ஜூஸ்

தேவையானவை:

சிறிய சுரைக்காய் – 1 
மோர் – ஒரு கப்
எலுமிச்சம்பழம் – 1 
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

* சுரைக்காயைத் தோல் சீவிக் கழுவி, துருவி வெறும் கடாயில் வதக்கி, ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும்.

* அதனுடன் மோர், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: இது, உடல் சூட்டைக் குறைக்கும்… சிறுநீரைப் பெருக்குவதால் நீர்க்கடுப்பு பிரச்னை வராது.

குறைந்த கலோரி மற்றும் நிறைய புரதச்சத்து இருக்கிற காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தாலே உடல் எடை குறைவதோடு உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் என தெரியவந்துள்ளது.
ஏனென்றால் டயட்டில் இருக்கும் போது நிறைய காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டால் எடை குறைவதோடு, புற்றுநோய், சிறுநீரகக்கல், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்கள் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
சுரைக்காய் ஜூஸ்: இதில் இரும்பு மற்றம் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்தால் எடை குறைவதோடு, உடலுக்கு பளபளப்பைத் தரும்.
தர்பூசணி ஜூஸ்: இதில் அதிக வைட்டமின்கள் உள்ளன. இது குடிப்பதால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல், இதய நோய்க்கும் மிகச் சிறந்தது.
ஆரஞ்சு ஜூஸ்: இதில் அதிக புரதச்சத்தும், குறைந்த கலோரியும் இருப்பதால் உடல் எடை குறைவதற்கு மிகச் சிறந்த பானம். இதிலுள்ள வைட்டமின் சி உடலுக்கு நிறமும் தருகிறது. மேலும் இதைக் குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் பிட் ஆகும்.
கேரட் ஜூஸ்: இந்த ஜூஸ் குடிப்பதால் கண்களுக்கு நல்லது. மேலும் இதை தினமும் குடித்தால் உடலுக்கு நிறத்தை தருவதோடு, உடல் எடையும் குறையும்.
திராட்சை ஜூஸ்: இது ஒரு சுவையான பழச்சாறு. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்கள் எளிதாக குறைந்து உடல் எடை குறைந்துவிடும். மேலும் இது சிறுநீரகக் கோளாறு, இதய நோய், ஆஸ்துமா, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை போக்குகிறது.
ஆகவே கஷ்டப்பட்டு எடை குறைக்காமல், ஈஸியாக இந்த இயற்கை பானங்களை அருந்தி எடையை குறையுங்கள்.

வாழைத்தண்டு சூப்

தேவையானவை:
  • இளம் வாழைத்தண்டு – 2
  • பார்லி – 50கிராம்
  • மிளகுப்பொடி – 4 ஸ்பூன்
  • எலுமிச்சம்பழச்சாறு – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • பால் – 1/2 கப்

செய்முறை:

  • வாழைத்தண்டைத் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜுஸ் பிழிந்து ​ வடிகட்டிக் கொள்ளவும்.
  • பார்லியை இளம் சிவப்பாக வறுத்துப் பொடியாக்கவும்.
  • அரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.
  • வாழைத் தண்டு சாறில் பார்லி மாவைக் கலந்து கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • பின் இறக்கி வைத்து மிளகுப் பொடி உப்பு,​ எலுமிச்சம்பழச்சாறு மற்றும் பால் சேர்த்து சூடாக அருந்தவும்.

குறிப்பு:
  • வாழைத்தண்டை பச்சை சாறாக அருந்த பலருக்கும் பிடிக்காது.
  • அதனால் இப்படிச் செய்வதால் பிடித்தமான உணவும் ஆகிவிடுகிறது!
  • வாழைத்தண்டு சாறு பச்சையாக அருந்தினால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. சளி பிடித்துவிடும். இப்படிச் சூப்பாக அருந்தும்போது விருப்பமாகவும் இருக்கும்.
  • சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தப்பைக் கற்களுக்கு அருமையான மருந்து.
  • உடலில் உள்ள கெட்டக் கொழுப்பைக் குறைத்து உடல் எடையையும் குறைக்க​ செய்யும்.
  • அருமையான மருத்துவ உணவு!

Thursday, March 20, 2014

10 கறிவேப்பிலை காலையில் எழுந்ததும்

உடல் இளைக்க எளிய வழிகள் ...

உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

கிச்சடி



கிச்சடி - முக்கியமாக பயத்தம் பருப்பும், அரிசி கலந்த உணவு கூட சேர்க்கப்படும் பல வகை மூலிகைகளும் வாசனை திரவியங்களும் கிச்சடியை மருந்து உணவாக மாற்றுகின்றன. ஆயுர்வேத சிகிச்சையில் கிச்சடி பத்திய உணவாக பரிந்துரைகப்படுகிறது. காரணம் சுலபமாக ஜீரணமாகும், சுலபமாக உட்கிரகிக்கப்படும். எந்த தோஷத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கிச்சடியை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குறிப்பாக வாத தோஷம் உள்ளவர்களுக்கு கிச்சடி மிகவும் ஏற்றது.

தேவை

பாஸ்மதி அரிசி                               - 3/4 கப்
உடைத்த பயத்தம் பருப்பு           - 1/2 கப்
நெய் / நல்லெண்ணெய்               - 1/2 டே. ஸ்பூன்
ஜீரகம்                                                  - 1 டீஸ்பூன்
கடுகு                                                    - 1 டீஸ்பூன்
பெருங்காயம்                                   - 1/4 டீஸ்பூன்
இஞ்சி (துண்டு செய்து)                 - 1/2 இன்ச்
மஞ்சள் பொடி                                  - 1/2 டீஸ்பூன்
உப்பு                                                     - 1/2 டீஸ்பூன்
மிளகாய்பொடி                                - 1/2 டீஸ்பூன்
தண்ணீர்                                            - 4 - 6 கப்

(மசித்த கிச்சடி தேவையா (அ) உதிரியான கிச்சடி தேவையா என்பதை பொருத்து)

செய்முறை

அரிசியையும், பருப்பையும் நன்கு கழுவவும். கலந்து வைக்கவும்.

அடிகனமுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் / எண்ணெய்யை காய்ச்சவும். எண்ணெய் அல்லது நெய் காய்ந்தவுடன் பெருங்காயம், ஜீரகம், கடுகு சேர்க்கவும்.

இவை வெடித்தவுடன் இஞ்சியை சேர்க்கவும். அரை நிமிடம் வதக்கவும்.

அரிசி, பயத்தம்பருப்பு, மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப்பொடி சேர்க்கவும்.

நன்றாகக் கலக்கவும்.

தண்ணீரை சேர்க்கவும். பாத்திரத்தை மூடி தீயைக் குறைத்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். முப்பது நிமிடம் வேகவிடவும்.

தீயை அணைத்து ஐந்து நிமிடங்கள் கிச்சடியை அப்படியே வைக்கவும்.

ப்ரஷர் குக்கரை உபயோகப்படுத்தினால் கிச்சடியை 1 விசில் வரும் வரை வேக விடவும். குக்கரை குளிர விடவும்.

கிச்சடியை ஸ்பூனால் மெதுவாக கிளறி சிறிது நெய் விட்டு பரிமாறவும்.

வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்க்க

உடலுழைப்பு, உடற்பயிற்சி, தினசரி நடப்பது
2. அப்யங்கம் (எண்ணை மசாஜ்)
3. உலர் மசாஜ் (உத்வர்த்தனம்) திரிபாலா, கொள்ளு போன்றவற்றால் மசாஜ் செய்ய கொழுப்பு கரையும். 14 லிருந்து 21 நாட்கள் உத்வர்த்தன சிகிச்சை, ஒரு நாளுக்கு 1 மணி நேரம் செய்தால், எடை கணிசமாக குறையும். உத்வர்த்தனம், கொழுப்பை கரைக்கும் நல்ல சிகிச்சை.
4. உத்வர்த்தன சிகிச்சைக்கு முன்பு ஸ்வேதனம் செய்து கொள்ளலாம். ஸ்வேதனம் - வியர்வையை உண்டாக்கும் சூடு ஒத்தடம்.
5. வாமனம், விரேசனம், காஷ்யவஸ்த்தி இவற்றால் உடலிலிருந்து மலங்கள், நச்சுப்பொருட்கள் நீக்கப்படும்.
6. 'கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைத்தவனுக்கு எள்ளு' என்பார்கள். கொள்ளு சேர்ந்த உணவுகள் பயனளிக்கும்.

சீந்திற்கொடி, கோரைக்கிழங்கு இவைகளையும் த்ரிபலா மோர், அரிஷ்டங்கள் இவற்றையும் தேனையும் உட்கொள்ளலாம்.

வாயுவிடங்கம், சுக்கு, யவக்ஷ£ரம், கருப்பிரும்புப் பொடி, தேன், யவதானியம், நெல்லிக்காய், என்பவைகளைப் பயன்படுத்தினால் சிறந்ததாக இருக்கும்.

த்ரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலந்த கலவை.

வில்வாதி பஞ்சமூலம் என்னும் ஐந்து வேர்களைத் தேனுடனும், சிலாசித்தை அக்னிமந்தரஸத்துடனும் (முன்னை ரசம்) சேர்த்துக் கொடுப்பது நல்லது.

பிரசாதிகா (சாமதானியம்) ஞாழல், சாமைநெல், சிறுயவதானியம், யவதானியம், சோளம், கேழ்வரகு, பயறு, கொள்ளு, பச்சைப்பயிறு, துவரை, புடல், நெல்லிக்காய் என்பவற்றை உணவுக்காகக் கொடுக்க வேண்டும். தேனுடன்கூடிய தண்ணீரை அனுபானமாகவும் மேதஸ், மாமிசம், கபம் என்பவைகளைக் குறைக்கும் அரிஷ்டங்களைப் பருமன் நீங்குவதற்காகவும் தக்க வகையில் துணைப்பானமாகத் தரலாம். பருமனை நீக்க விரும்புகிறவர் கண்விழித்தல், உடலுறவு, தேகப்பயிற்சி ஆலோசனை ஆகியவற்றை முறையே வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேற்சொன்வை தவிர பல மூலிகைகள், மருந்துகள் ஆயுர்வேதத்தில் உடல் இளைக்க கையாளப்படுகின்றன. பக்க விளைவுகளின்றி இயற்கையாக இளைக்க ஆயுர்வேதம் உதவும்.

மேலும் சில யோசனைகள்

உடல் இளைக்க பட்டினியிருக்கக் கூடாது. உண்ணும் உணவின் அளவு குறையாமல், கலோரிகளை குறைக்க வேண்டும்! தீவிர உடற்பயிற்சிகள் தவிர, சிறிய அசைவுகள், குனிந்து நிமிர்ந்து வேலை செய்தல் போன்றவைகளும் உண்ட கலோரிகளை செலவழிக்க (எரிக்க) உதவும். உதாரணமாக 300 கலோரிகளை குறைத்து, இன்னொரு 200 கலோரிகளை 'எரித்தால்' ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 1/2 கிலோ எடை குறையும்.

நார்சத்து நிறைந்த உணவுகள் உண்ட நிறைவை கொடுத்து, குறைந்த கலோரிகள் தரும்.

ஒரு சாதாரண மனிதனுக்கு, தினம் அவருடைய ஒரு கிலோ உடல் எடைக்கு 33 கலோரிகள் தேவை. இந்த கணக்கில் நீங்கள் சாப்பிட வேண்டிய கலோரிகளை தெரிந்து கொள்ளலாம்.

காலை உணவு அவசியம்.

ஒரே தடவை அதிக உணவை உண்பதை விட, சிறு உணவாக (2 மணி நேரத்திற்கு ஒரு முறை) உண்ணவும்.

எடை இழப்பு நிதானமாக இருக்க வேண்டும். ஒரு வாரத்தில் 1/2 (அ) 3/4 கிலோ இளைத்தால் போதுமானது.

முழுதானியங்கள் நிறைந்த உணவு நல்லது. காலை உணவில் தானியங்களுடன், புரதம் நிறைந்த முட்டை அல்லது ஆடையில்லாத பாலில் செய்த 'சீஸை' சேர்த்துக் கொள்ளலாம்.

பாலை உபயோகிக்கையில் ஆடை அகற்றிய கொழுப்பு குறைவான பாலையே பயன்படுத்தவும்.

இனிப்புகள், வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டுவது அவசியம்.

வீட்டில், அலுவலகத்தில் சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும். சுறுசுறுப்பாக நடக்கவும். லிப்டை பயன்படுத்தாமல், மாடிப்படிகளில் ஏறி இறங்கவும். உட்கார்ந்த நிலையில், நிற்கும் நிலையில் செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும்.

மென் பானங்களை (Soft drinks) குடிக்க வேண்டாம். அதற்கு பதில் வெறும் தண்ணீர் குடிப்பது நல்லது.

பசித்தால் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. எடை குறைய உதவும். 'சூப்' சாப்பிடுவதும் நல்லது. காய்கறி ஜுஸ், பழங்கள் இவற்றை எடுத்துக் கொள்ளலாம். பச்சைகாய்கறிகள், பாதாம் போன்ற கொட்டைகளை உண்ணலாம்.

அடிக்கடி உடலுறவு கொள்ளுதலும் உடற்பயிற்சி தான்.

ஸ்ட்ரெஸை (Stress) தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம். யோகா, தியானம் தவிர சில உணவுகள் மனச்சோர்வை குறைக்க உதவும். ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ராலை குறைத்து மூளையை ஊக்குவிக்கும். மீன், பாதாம், வாதாம் பருப்பு போன்ற கொட்டை வகைகளில் ஒமேகா - 3 அதிகம் உள்ளது. க்ரீன் - டீ தினம் 3 வேளை குடித்தால் 3 மாதங்களில் 5% எடை குறையும். உணவு வேட்கை ஏற்படும் காரணம் மூளை தான்! வயிறோ, ருசி அறியும் நாக்கோ அல்ல! எனவே மன அழுத்தத்தை குறைத்து மூளை அமைதியானால் உணவு ஆசையை கட்டுப்படுத்தலாம்.

நீங்கள் சரியாக தூங்குவது அவசியம். 7 லிருந்து 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூங்காவிட்டால் நல்லுணர்வை தரும் செரோடோனின், டோபாமைன் இவை சுரக்காது. பின் மூளை என்ன செய்யும்? இவற்றுக்கு பதில் இனிப்பு உணவுகளை நாடும். இந்த பிரச்சினை வயதாக வயதாக அதிகரிக்கும். முதியோர்களின் பீனியல் சுரப்பி (Pineal gland), தூக்க ஹார்மோன் மெலாடோனினை குறைவாக சுரக்கும். இதனால் அதிக கார்போ-ஹைடிரேட் உண்ணும்'வெறி' ஏற்படும். தூக்கமில்லாத வர்கள் இரவில் ஏதாவது சாப்பிட வேண்டுமென்று அலைவதற்கு இது தான் காரணம். எனவே தூக்கமின்மையை குணப்படுத்திக் கொள்ளுங்கள். இரவுத் தூக்கம் உடல் எடையை சரிவர வைக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக 9 முறை சாப்பிடுவதால்

லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் உடல்பருமனை குறைப்பதற்கான வழிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இங்கிலாந்து, ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு ஒரே கலோரி அளவுள்ள உணவு 6 முதல் 9 முறை கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

3 வேளையை 2 வேளையாக குறைப்பதாக கூறி அதிகமாக சாப்பிடுவது ஆபத்து. கொஞ்சம் கொஞ்சமாக 9 முறை சாப்பிடுவதால் ரத்தக்கொதிப்பு, கொழுப்பு கட்டுப்படும். உடல் எடையும் சீராகும்.

உண்ணும் உணவு ஊட்டச்சத்துள்ளதாக இருக்க வேண்டும், குறைவாக, போதிய இடைவெளி விட்டு சாப்பிடவேண்டும். இயற்கை உணவுகளை அதிகரித்து கொழுப்பு உணவை தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சியும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மிளகு ரசம் ஒரு டம்ளர்

தினமும் காலை சுமார் பதினோரு மணியளவில் மிளகு ரசம் ஒரு டம்ளர் பருகுங்கள். அது போதும். எத்தனை நாள் சாப்பிட வேண்டும் என்று கேட்காதீர்கள்! தினமும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். இந்த ரசத்துக்கு மணம், குணம் ஊட்ட கறிவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

-

இந்த மிளகு ரசத்தில் பருப்பைத் தவிர்ப்பது உசிதம். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதத்திற்கு இரண்டு, மூன்று கிலோ வரை உடல் குறையும்.

உடல் எடையைக் குறைக்க

“உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நீர் முடிவெடுத்து விட்டால், அதன் பிறகு நீர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் சில இருக்கிறன. அவற்றைத் தவறாமல் கடைப் பிடிக்க வேண்டும்” என்றார்.

“என்னென்ன நடைமுறைகள்?”

“சரிவிகித உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, நேர்மறை மனோபாவம், சரியான தூக்கம் ஆகியவை. சீரான ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளவும் இவைதான் தேவை”

“சரிவிகித உணவுப் பழக்கம் என்றால் என்ன?”

“நாம் உண்ணும் உணவில் மாவுச்சத்துக்களும், புரதச்சத்துக்களும், விட்டமின் மற்றும் தாதுச்சத்துக்களும், மற்றும் நார்ச்சத்தும், கொழுப்புச் சத்தும் தேவையான விகித்த்தில் இருக்க வேண்டும். உடல் இளைக்க முயற்சி மேற்கொள்ளும் சமயங்களில் இந்த விகிதத்தோடு நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கலோரிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்”.

“கலோரிகளை கணக்கில் எடுத்துக் கொள்வதென்றால் எப்படி?”

“அதாவது ஒருநாளைக்கு நாம் உண்ணும் உணவில் சராசரியாக 2500 இலிருந்து 3000 கலோரி வரை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் 2000 இலிருந்து 2500 கலோரி அளவே நமது தினசரி செயல்பாட்டுக்குப் போதுமானது. சிலருக்கு 1800 கலோரி அளவே போதுமானது. அந்த அளவு மட்டும் எடுத்து கொள்ளும் போது நமது எடை கூடவோ, குறையவோ செய்யாது அப்படியே இருக்கும்”

“அப்படியானால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் 2000 கலோரியை விடவும் மிகக்குறைவாக உள்ள உணவையே எடுத்துக் கொள்ள வேண்டும். சரிதானே?”

“மிகவும் சரி. அப்படி குறைவான கலோரிகள் உள்ள உணவை எடுத்துக் கொள்ளும் போது, தினசரி செயல்பாட்டுக்குத் தேவையான கலோரிகளை, நமது உடலில் ஏற்கெனவே சேமித்து வைக்கப் பட்டுள்ள கொழுப்பிலிருந்து உடல் எடுத்துக் கொள்ளும்”

“அப்படி எடுத்துக் கொள்வதால் உடலில் பாதிப்பு ஏற்படாதா?”

“சரிவிகித உணவு முறையைப் பின்பற்றும் போது உடலில் அதிகப்படியான கொழுப்பு கரைக்கப் படுமே ஒழிய பாதிப்பு எதுவும் ஏற்படாது”

“சரி, நீர் சொல்வது போல கலோரி குறைவான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் போதுமா? வேறு எதுவும் செய்ய வேண்டாமா?”

“அப்படியில்லை. தவறாமல் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்”

“அப்படி உடற்பயிற்சியும் வேண்டும் என்றால், அதை அதிக நேரம் செய்யும் போது இன்னும் அதிக கலோரிகள் செலவாகி உடல் எடை அதிகம் குறையும் அல்லவா?”

“நீர் நினைப்பது போல்தான் நிறையப் பேர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் உள்ள கொழுப்புச் சத்து குறைய வேண்டுமானால், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் எடையைக் குறைக்கிறேன் என்று தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டால் எடை குறையாது”

“தீவிர உடற்பயிற்சி செய்யும் போது அதிக கலோரி செலவாகும் அல்லவா? அப்படி அதிக கலோரி செலவானால் எடை குறையாதா?”

“தீவிர உடற்பயிற்சியின் போது அதிக கலோரி செலவாகும் என்பது உண்மைதான். ஆனால் அதிகப்படியான மாவுச்சத்துதானே கொழுப்பாக நம் உடலில் சேர்த்து வைக்கப் படுகிறது. அப்படி ஏற்கெனவே சேமிக்கப்பட்ட கொழுப்பிலிருந்துதான் தீவிர உடற்பயிற்சியின் போது தேவைப்படும் கலோரியை உடல் எடுத்துக் கொள்கிறது. ஆனால் அதை ஈடுகட்டுவதற்காக நாம் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். நாம்தான் உடற்பயிற்சி செய்கிறோமே அதனால் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கையில் சாப்பிடுவோம். அப்போது உடற்பயிற்சியினால் செலவான கலோரி மறுபடி உடலில் சேர்ந்து விடும். இப்போது அது ஈடுகட்டப்பட்டு விடுவதால் எடை குறையும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதனால் தீவிர உடற்பயிற்சியை விட எளிமையான உடற்பயிற்சியே சிறந்தது. ஆனால் அதை தவறாமல் செய்ய வேண்டும்”

“இது மிகவும் உபயோகமான தகவல்தான்” என்றோம்.

“அதுமட்டுமல்ல. நேர்மறை மனோபாவமும் அவசியம். அதாவது நம்மால் எடை குறைக்க முடியும் என்ற ஆழமான நம்பிக்கை வேண்டும்”

“நம்பிக்கை இல்லாமலா, உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பார்கள்?”

“நம்பிக்கையுடன்தான் ஆரம்பிக்கிறார்கள். சிறிது காலம் முயற்சிப்பார்கள். ஆவலோடு, எடை குறைகிறதா என்று எடை மெஷினில் ஏறிப் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் நினைத்தது போல் எடையில் வித்தியாசம் இல்லையென்றால் நம்பிக்கை குறைந்து விடும். உடனே வேறு வழியில் முயற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்”

“அவர்களுடைய எதிர்பார்ப்பு பொய்க்கும்போது வேறு என்ன செய்ய முடியும்?”

“அதற்குத்தான் நேர்மறை மனோபாவம் அவசியம். எடை குறைவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படும் என்பதைப் புரிந்து கொண்டு அது வரை பொறுத்திருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது”

“சரிதான்! ‘நானும் எவ்வளவோ முறைகளை முயற்சி செய்து பார்த்து விட்டேன். ஆனால் உடல் எடை குறையவில்லை’ என்று சொல்பவர்களை நானும் பார்த்திருக்கிறேன்”

“ஆமாம், உடல் எடையைக் குறைக்க ஒரு குறிப்பிட்ட கால அளவு கெடுவை குறிக்கோளாக வைத்துக் கொண்டு, அதற்காக முயற்சிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன், குறைவான கலோரி உள்ள சரிவிகித உணவை எடுத்துக் கொண்டு, தவறாமல் உடற்பயிற்சியும் செய்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும்”

வாழைத்தண்டு சூப் - செய்முறை

வாழைத்தண்டு சூப்:
வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, மிளகு, சீரகம், பூண்டு, சிறிது எலுமிச்சை பழச் சாறும் கலந்து மூடி கொதிக்க வைத்து, உப்பிட்டு முறைப்படி தாளித்துக் கொள்ளவும். இதனை காலை-பகல் உணவிற்கு முன் அருந்தவும். உடல் கனம் குறையும். இரத்த அழுத்தம் கூடுதலானவர்களுக்கு மிகவும் சிறந்த உணவு ஆகும்.


வாழைத்தண்டை இடித்துத் தேவையளவு சாற்றை எடுத்து, மண் சட்டியில் ஊற்றிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு இவைகளைத் தட்டிப் பச்சைக் கொத்தமல்லியும் போட்டு மூடி கொதிக்க விட்டு, இறக்கி சிறிது எழுமிச்சம்பழச் சாற்றைக் கலந்து உப்பிட்டு அருந்தி வரலாம். 3 மாதங்களில் உடல் கனம் குறையும்

கொழுப்பு குறைய

. உடற்பருமன் ஏற்பட்டு விட்டதா? ஆமனக்குச் செடி வேரைக் கொண்டுவந்து, நன்றாகப் பொடித்து, அத்துடன் தேனைக் கூட்டிப் பிசைந்து, ஒரு டம்ளர் தண்ணீரில் அப்படியே ஊறவைத்து விடுங்கள். இரவு முழுவதும் ஊறினதும், காலையில் கலக்கி வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். நாலு வாரத்திற்குள் நல்ல பயன் தெரியும்.

2. பொன்னாங்கன்னிக் கீரையைத் துவரம் பருப்புடன் மிளகு சேர்த்து சமைத்து உண்டு வந்தால், 3 மாதங்களில், பெருத்த உடல் பருமன் குறைந்து, நல்ல கெட்டியடைந்து ஆரோக்கியமடையும். நல்ல தேஜஸும், வீரிய விருத்தியும் உண்டாகும். நேத்திர ரோகமும் விலகும்.

3. தூல சரீரம் கறைந்து கெட்டிப்பட நில ஆவாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி, துணியில் சலித்து, ஒரு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு, தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் போதும் தன்னில் தானே, உடல் வற்றிக் கெட்டிப் படும்.

4. பச்சை வாழைத் தண்டை நறுக்கி, அதில் எழுமிச்சைச் சாற்றினைக் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறையும்.

5. காலையில் எலுமிச்சைப் பழச் சாற்றை உப்பு சேர்த்துக் கலந்து, ஒரு மாதம் வரை வெறும் வயற்றில் அருந்தினால், தேவையற்ற கொழுப்புச் சத்தும், ஊளைச் சதையும் குறையும். ரத்தமும் சுத்தப்படும்.

6. அகில் கட்டையை பசும்பால் விட்டு சந்தனம் அரைப்பது போல அரைத்து, அதை உடம்பில் பூசிகொள்ள, உடல் தளர்ந்து சதையெல்லாம் தொள தொள என்று ஆட்டும். தொண்டு கிழவர்களின் தசை னார்கள் கெட்டிப்படும்.

7. கொழுப்பு உணவையும், அரிசி உணவையும் குறைத்துக்கொண்டு தினம் எழுமிச்சம்பழச் சாறு 1 அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ், தண்ணீர் ௪ அவுன்ஸ், மூன்றையும் கலந்து, சிறிது சூடு செய்து, கலையில் ஒரு வேளைமட்டும் சாப்பிட்டு வர, எடை குறையும்.

இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு; கொழுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு

ஆனால் இளைத்த உடல் பருக்க, பருத்த உடல் இளைக்க, இன்றைக்கு functional foods-எனும் போர்வையில் உணவுச்சந்தையில் பெருகி இருக்கும் உணவுகளைக் கணக்கிட முடியாது. தொப்பையையும் தொடையையும் கிராபிக்ஸில் சுருக்கிக் காண்பித்து வலைவீசும் இவர்கள் பிடியில் ஏராளமான சோம்பேறிகள், சிலகாலம் வயிற்றையும், பலகாலம் தங்கள் மணிபர்ஸையும் மெலிய வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

சின்ன குழந்தைகள் குண்டாவதற்கு அதிக பால் உணவுகள் மிக முக்கியக் காரணம். பால் உணவல்ல. மருந்தாய் மட்டும் பயன்படுத்தக் கூடியது. ஆனால், பால் ஒரு வெள்ளை காசு என கண்டறிந்த மேர்கத்திய விஞ்ஞானம், அதன் வியாபாரத்தைக் கொழிக்க வைக்க, வழக்கம் போல் விஞ்ஞானிகள் மூலம் தனக்கு வேண்டிய சான்றுகளை மட்டும் அள்ளித் தெளித்தது. ”வெள்ளைக்காரன் சொல்லிட்டால் வேதமாச்சே!,” என்ற நம் பாட்டன் மூன்றாம் விதிப்படி, பால் அதிகம் பழக்கமில்லாத நம் மரபு, பாலை உன்னத உணவாக்கி விட்டது. “அதிக பால் உடல் எடையை அதிகரிக்கும்.  நுரையீரலில் சளி சேர்க்கும்.”- என நம் முன்னோர் சொன்னதை மறந்து போக ஆரம்பித்தோம்.

போதாக் குறைக்கு, பாக்கெட்டில் வரும் பல மாட்டின் கலப்பு பதனப்படுத்தப்பட்ட பாலில் உள்ள புரதம் ஒரு வேளை சர்க்கரை வியாதி தருமோ என்ற ஆய்வு நம்ம் ஊரிலேயே நடக்கிறதாம். அதிகம் பால் சாப்பிட்டால் அத்திரோஸ்கிளீரோசிஸ் எனும் இரத்த நாள கொழுப்புப் படிதல் வருமோ? என்ற கவலை வேறு அதிகரித்து வருகிறதாம். இதுக்குப் பின்னரும், ”இந்த பாலைக் குடிக்கலை..அப்புறம்?”-என் உங்கள் குழந்தையை குச்சிக் கம்பை வைத்து மிரட்ட வேண்டாம். புத்திசாலி அவன்.ஆரோக்கியமாய் இருக்கட்டும். ”அப்புறம் கால்சியத்துக்கு நாங்க எங்க போவது?” என்போருக்கு- நிறைய கீரை, மோர் போதும்; பல நேரம் மோரின் கால்சியம் பாலின் கால்சிய அளவைவிட அதிகம். கூடவே இலவச இணைப்பாக லாக்டோபாசிலஸ் முதலான பல உடலுக்கு நலம் பயக்கும் நுண்ணுயிரிகளும் மோரில் உண்டு. கிடைத்தால் பிராக்கோலி, சோயா பன்னீரும் சேர்க்கலாம்.





பால், இனிப்புப் பொருள், கிழங்கு, பட்டை தீட்டிய பச்சரிசி இவற்றை மறக்காமல், தொப்பையை மறைக்க முடியாது. பட்டை தீட்டிய கோதுமை மாவில் செய்த பர்கர் ரொட்டிகள், டிரான்ஸ்ஃபேட் எனும் கெட்ட கொழுப்பு நிறைந்த பிட்சா, ஃபிங்கர் பிரைஸ் எனும் உருளைக் கிழங்கு சிப்ஸ், குளிர் பானங்கள், வெள்ளை சர்க்கரை, பிராய்லர் கோழி, எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகள் இவற்றை எல்லாம் தவிர்த்து, தினசரி 45 நிமிட நடைப்பயிற்சியும், 20 நிமிட மூச்சுப் பயிற்சியும் செய்தால், காசு பணம் செலவழிக்காமல், இரைப்பை- குடல் பகுதிகளை அறுத்து நீக்காமல், வயிற்றுக் கொழுப்பை உறிஞ்சி எடுத்துப் போடாமல் உடல் எடையைக் குறைக்க உதவும்.
சமையலில் இப்போது நாம் பயன்படுத்தும் புளி, ஆப்ரிக்க சூடான் நாட்டில் இருந்து நாம் சுட்ட புளி.  குடம்புளி (அல்லது கோக்கம் புளி) எனும் Garcinea campogea, தான் நம்ம ஊர் பழைய புளி என வாதிடுவோர் தாவர உலகில் உண்டு.. 

இந்த குடம்புளி உடல் எடையைக் குறைக்க தன்னுள்ளே ’ஹைட்ராக்சி சிட்ரேட்’ எனும் பொருளைக் கொண்டுள்ளதாம். விஷயம் தெரிந்த ஹெயின்ஸ் முதலான பல ஸ்குவாஷ் கம்பெனிக்கார்ர்கள் இந்த குடம் புளியை, அது ஏராள்மாய் விளையும் நம்ம மலபார்-கொங்கன் பகுதியில் இருந்து வெளி நாடுகளுக்குக் கப்பலேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதே, எடை குறைக்க உதவும் ஹைட்ராக்ஸி சிட்ரேட் கொஞ்சமாய் உள்ள இன்னொரு உணவு நம்ம ஊர் ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா கீரை(புளிச்ச கீரை).
எடை குறைக்க நார் உணவு மிக அவசியம். மரக்கறிக்காரர்களுக்கு நார் பொருள் கிடைப்பது பெரும்பாலும் கீரையிலும் பழத்துண்டிலும் இருந்துதான். “கீரையை ஆய்ந்து செய்ய நேரமில்லை; பழத்தை கடித்து சாப்பிடக் கஷ்டம்” என சாக்கு போக்கு சொல்வோருக்கு, ஒரு நாளைக்குத் தேவையான 25கிராம் நார்ப்பொருள் கிடைக்காததால், உள்ளே வெளியே இரண்டு பக்கமும் கொழுப்பு சேரும். தினசரி வெந்தயம் 2 ஸ்பூன் காலை மாலை சாப்பிடுவது உடலை மெலிய வைக்கும். வெந்தயத்தின் நார்ப் பொருளும் அதிலுள்ள சப்போனின்களும் இரத்தக் குழாயின் உள் சேரும் இரத்தக் கொழுப்பையும் டிரை கிளிசரைடையும் குறைய வைக்கும் என பல ப்ல்கலைக்கழக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. கூடவே, “எனக்கு சுகர் வந்திருச்சா? வரலையா? தெரியலையப்பா” என நாயகன் கமல் மாதிரி தலை சொறிந்து பதற்றத்துடன் இருக்கும் ஐ.ஜி.டி(IGT), நபர்களுக்கு வெந்தயம் சுகர் வரவைத் ’தள்ளிப்போடும் விசேஷம்’.


”பால் சாப்பிடக் கூடாது; இனிப்பு வேண்டாம்..வேற என்ன சார் காலையில் குடிப்பது? என்போருக்கு, ஆவாரை டீ  நாம் மறந்து போன ஒரு அருமையான பாரம்பரிய பானம். ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ? என்று முது மொழியொன்று நம்ம ஊரில வழக்கத்தில் உண்டு. “ரோசாப்பூ, ஆர்க்கிட் பூ” மாதிரி இதுக்கு, மலர் மார்க்கெட்டில் மவுசு இல்லை என்றாலும், இன்னும் கொஞ்ச நாளில் இதன் சந்தைக்கு பெரும் அடிதடி வரப்போவது உறுதி.

ஆரம்பக்கட்ட சர்க்கரை நோயில், இந்த மலர் தரும் மருத்துவத்தினால், பலர் பயனடைவதை ஆரம்பக்கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ”ஆவாரை கொன்றை நாவல் அலைகடல் முத்தங் கோஷ்டம் மேவிய மருத்த் தோல்,”- என ஏழு தாவரங்களைக் கொண்டு டீ போட்டு குடித்தால், ”காவிரி நீரும் வற்றும்; கடல் நீரும் வற்றும்” என பரிபாஷையில் சித்தன் சொன்ன சூத்திரத்தை கட்டவிழ்த்துப் பார்த்த விஞ்ஞானிகள், இனிப்பு நீரான(காவிரி நீர்) சர்க்கரை வியாதிக்கும், உப்பு நீரான(கடல் நீர்) சிறுநீரகக் கோளாறில் புரதம் கழிந்து வரும் நீருக்கும், இந்த ஆவாரை காபி ஒரு அரு மருந்து எனபதைக் கண்டறிந்துள்ளது.
பழசுக்கு எப்போதும் பளபளப்பு விலாசம் கிடையாது. பகட்டான விளம்பரமும் கிடையாது. பக்குவமாய் பேசி மயக்கவும் தெரியாது. ஆனால் பல நேரங்களில் பழமை நம்மைப் பாதுக்காக்கும் அன்னைமனம் கொண்ட்து.

தொப்பை கரைய அன்னாசி

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.

இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

Wednesday, March 19, 2014

எடை பருமன் உடல் மெலிய

உடல் எடை குறைய:
1)எப்போதும் நமது எண்ணங்கள் பாசிட்டிவாக இருந்தால்தான் எந்த வெற்றியையும் அடைய முடியும்.அது இந்த உடல் மெலிவதற்கும் பொருந்தும்.உடல் மெலிய வேண்டும் என்று உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க

ஆரம்பித்து விட்டால், இனி உடல் எடை குறையும்,இப்போது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நீங்களே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும்.என்ன் இது 2

வாரமாகியும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.

2) எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.

3)குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.

4) 3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள்.அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக

சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.எல்லோருடைய மெட்டபாலிசமும் ஒரே மாதிரி இருக்காது.இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு

இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.அதனால்தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை சிறிய உணவாக உண்ண சொல்லுகிறார்கள்.எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில்

சாப்பிடுங்கள்.அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக,நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.

5)சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து

தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும்.

6)என்ன சாப்பிட்டாலும் அதிலிருந்து எவ்வளவு எனர்ஜி கிடைக்கிறது என்று பாருங்கள்.இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எளிது.அதிகம் கிலோ ஜூல்ஸ் உள்ள பதார்த்தங்களை எளிதாக தவிர்த்து விடலாம்.இதில்

முக்கியமாக தவிர்க்க வேண்டியவை Sweets.எடை கூட இது முதற் காரணம்.Equal போன்ற கலோரி குறைந்த Sweetener ஐ உபயோகியுங்கள்.

7) டயட் என்றால் பட்டினி கிடப்பதில்லை.அதேபோல் சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதும் இல்லை.இப்படி செய்ய ஆரம்பித்தால் வெறுப்புதான் வரும்.எதையும் மனதிற்கு பிடித்து செய்ய

வேண்டும்.ஒரு வேளை கூட பட்டினி கிடக்காதீர்கள்.அப்புறம் உங்களையும் அறியாமல் அடுத்த வேளை அதிகம் சாப்பிட்டு விடுவீர்கள்.மீண்டும் உணவு கொழுப்பாக உடலில் தங்கிவிடும்.காலை உணவு எடுத்துக்

கொள்வது மிகவும் அவசியம்.

8)ஆவியில் வேக வைத்த உணவு,நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள்.வாரம் ஒரு முறை பொரித்த உணவு,ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான

அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொளுங்கள்.புரோட்டீன்,கார்போஹைடிரேட்,நல்ல கொழுப்பு,கால்ஷியம்,இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை.இதன் அளவு

குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை,எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும்.பருப்பு,கீரை,அவித்த முட்டை,சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள்.சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு

சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.

8) டயட்டில் ஒன்று சொல்வார்கள்.வெள்ளையாக இருப்பவற்றை, குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று.ஜீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்றவை தான் இப்படி அளவை குறைக்க வேண்டிய

பொருட்கள்.நிறைய பேர் Full Cream milk, Skim Milk க்கு உள்ள வேறுபாட்டை அறியாமல் இருக்கிறார்கள்.Skim milk தண்ணீரை போன்று இருப்பதால் பலரும் அதை Diluted Full Cream milk அதாவது

தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் என்று நினைத்து விடுகிறார்கள்.அதனால் அதை வாங்கி உபயோகப்படுத்துவதும் இல்லை.Skim milk என்பது கொழுப்பு நீக்கப்பட்ட பால்.ஆனால் பாலில் உள்ள அத்தனை

சத்துக்களும் அப்படியேதான் இருக்கும்.எனவே உடல் எடை குறைய skim milk உபயோகிக்கலாம்.சத்துப் பற்றாக்குறை ஏற்படாது.

9)வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக

கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம்.இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும்.சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை

உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.இதற்கு மாற்றாக வெந்தயக்கஞ்சி செய்து சாப்பிடலாம்(கர்ப்பிணிகள்).

10)உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள்.உங்களால் பிட்னெஸ் செண்டருக்கு தொடர்ந்து சென்று பயிற்சி செய்ய முடியும் என்றால் மட்டுமே அதில்

சேருங்கள்.குழந்தை வைத்திருப்பவர்கள்,குழந்தையை ப்ராமில் வைத்து தள்ளிக் கொண்டு வாக்கிங் போகலாம்.அவர்களுக்கு வேடிக்கை காண்பிக்க வெளியில் அழைத்து சென்றது போலிருக்கும்.வாக்கிங் செய்வது

மிகவும் அவசியம்.உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்க நினைக்காதீர்கள்.வாக்கிங்,ஜாகிங் இப்படி வெளியே செல்லும் எந்த பயிற்சியும் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே உடல் பயிற்சி

செய்யலாம்.ஒழுங்காக கற்றுக் கொண்டு அல்லது புக்கில் படித்து புரிந்து,அதற்கென உள்ள வீடியோக்களை வாங்கிப் பார்த்து வீட்டினுள்ளேயே செய்யலாம்.

11)அதிக எண்ணெய்,மட்டன்(மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம்),ஸ்நாக்ஸ்(சிப்ஸ்) போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள்.டீ குடிப்பது

உடலில் கொழுப்பை சேர விடாது.அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம்.

12)சில வகை உணவுகள் செரிப்பதற்கு அதிக எனர்ஜியை எடுத்துக் கொள்ளும்.உதாரணமாக ஆப்பிள்,Broccoli போன்றவை செரிக்க அதிக எனர்ஜி தேவைப்படும்.அப்படி அதிக எனர்ஜி தேவைப்படும்போது நமது

உடலில் உள்ள கொழுப்பிலிருந்து சக்தி எடுத்துக் கொள்ளும்.எப்படியிருந்தாலும் மேற்கண்ட பொருட்களை சாப்பிடும்போது உடலில் கொழுப்பு சேர்வதில்லை.

13)Pepsi,Coke போன்ற பானங்களை குடித்தே ஆக வேண்டும் என்றால் Sugar Free அல்லது Diet பானங்களை பருகலாம்.Milo,Horlicks போன்றவை எடையை கூட்டவே செய்யும்.சாலட் சாப்பிட்டாலும் அதில்

மயோனைஸ்,சாலட் டிரஸ்சிங் சேர்க்காமல் எலுமிச்சை,மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.Baked Beans,Tuna can,Crackers போன்றவற்றை சிறிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.இதன் மூலம் புரோட்டீன்

போன்ற சத்துக்கள் கிடைத்துவிடும்.முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம்.முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை

கூட்டிவிடும்.

14)Exercise,Diet இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல.Diet என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள்.நிச்சயம் சரியான

டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும்.பரம்பரை காரணமாக சிலர் குண்டாக இருப்பார்கள்.அவர்களும் முயன்றால் எடையை நிச்சயம் குறைக்கலாம்.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள்,மருத்துவர்கள்

ஆலோசனை கேட்டு உடற்பயிற்சி செய்யலாம்.

உடல் பருமன் குறைக்க

1. யேசிக்காமால் உண்பதை நிறுத்துதல்: அடிக்கடி சிப்ஸ் சாப்பிடுதல். காரணம் இன்றிச் சாப்பிடுதல் அல்லது அந்தப் பழக்கத்தை திரும்பத் திரும்பச் செய்து உடலுக்கு அதை ஒரு நிரந்தரப்

பழக்கமாக்கிக்கொள்தலைத் தவிர்த்தல் மிக மிகவும் உங்கள் உடலுக்குச் சிறந்தது. இப்பழக்கத்தில் இருந்து எப்படி வெளியேறலாம்? மிக இலகுவானமுறை சாப்பிடும்போது அதை என்ன நேரம் என்ன

சாப்பிட்டதென்பதை நீங்கள் பார்க்கக் கூடிய இடத்தில் எழுதிவைத்தல், எழுதிவைத்ததில் கவனத்தைக் குவித்தல். இம் முறையை நீங்கள் கடைப்பிடித்தால் அது எடையைக் குறைப்பதற்கான சிறந்த முறையென

பல ஆராய்ச்சிகள் நிருபித்திருப்பதாக கூறப்படுகின்றன.

2. நாள் முழுவதுமே எப்படியாவது அசைந்து கொண்டிருங்கள். இது வீட்டில் இருப்பவர்களுக்கு இலகு. காரியாலங்களில் தொடர்ந்து இருந்து பணியாற்றுபவர்கள் அடிக்கடி தமது உடலை அசைத்தல் மிக நன்று.

நாற்காலியை விட்டு எழும்பும் போதெல்லாம் உடலை அங்கும் இங்குமான திருப்புதல், அமர்ந்திருக்கும்போது கூட தன் கால் பெருவிரலை நிலத்தில் படும்படி வைத்துக் குதிக்காலை உயர்த்துதல், சந்தர்ப்பம்

கிடைக்கும்போதெல்லாம் சிறிதளவு தூரமானலும் நடத்தல், இவற்றை அடிக்கடி செய்தல் மிக மிகச் சிறந்தமுறை.

3. தண்ணீர் குடித்தல்: நாம் தினமும் உண்ணும் உணவில் கணிசமான அளவு ‘ரொக்சின்’ இருப்பது நமக்கு நன்றாகவே தெரியும். நாம் அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம் அந்த நஞ்சுத் தன்மைகளை நமது உடலில்

இருந்து வெளியேற்றலாம். தேவையற்ற கொழுப்புப் பொருட்கள் கூட கரைவதற்கு தண்ணீர் உதவி செய்வதாக ஆராய்சிகள் தெரிவிக்கின்றன. முடிந்தால் சுடுநீர் குடிப்பது மிக மிக நன்று. சில கலாச்சாரத்தை

கடைப்பிடிக்கும் மக்கள் இவ்வாறு செய்வதை நாம் அவதானிக்க முடிகின்றதல்லவா?

3. சிறு சிறு தூரமான இடங்களுக்கு செல்லும்போது நடந்து செல்ல முயற்சியுங்கள். நடக்கும்போது அதிகமான பிராணவாயு உடம்பிற்குள் செல்வதால் அது அதிகமான கொழுப்பை கரைப்பதால் உங்களுக்கு உடல்

எடை குறைவது மட்டுமல்ல அதிகமான சக்தியும் கிடைக்கின்றது. அத்துடன் கிடைக்கின்ற நேரங்களில் நின்ற இடத்தில் நடத்தல். ஜோக்கிங் என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். எப்பொழுதெல்லாம் முடிகின்றதோ

அப்பொழுது செய்தல். நீண்ட நேரம் செய்யவேண்டும் என்பதலல முக்கியம். செய்து பார்த்தால்தான் உங்களால் அதன் பயன்பாடுபற்றி அனுபவபூர்வமாக உணர முடியும்.

4. உணவின் கலோரிசை மெதுமெதுவாகக் குறைத்தல். உங்கள் உணவில் அதமான அளவிற்கு நார்சத்தான உணவுகள், அதிகளவு புரோட்டின் உள்ள உணவுகள், என்பற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

எண்ணற்ற வகையான உணவுப் பொருட்களை நாம் பெறக் கூடியநாடு நம் கனடா. குறிப்பாக பொரித்த உணவுகள், டோனட்ஸ், பேக்கிள்ஸ், சிப்ஸ், உருளைக்கிழங்கு பொரியல், என்பவை கலோரிஸ் கூடியவை

மட்டுமல்ல உடல் எடையை இலகுவாகக் கூட்டும் தன்மை கொண்டவை. குறிப்பாக எந்தக்கடையாயினும் கடையில் தயாரிக்கப்பட்ட எந்த உணவுப் பொருட்களும் உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும்

என்பது தவறான கருத்தாகும். தவிர்த்துப்பார்த்தால் உண்மை புரியும்.

5. அதிகமான அளவில் பலதரப்பட்ட காய்கறிவகைளை உணவில் சேர்த்துக் கொள்ளல் மூலம் உடலில் இருந்து ரொக்சினை அகற்றலாம். ஸ்நெக் தேவையாக இருந்தால் பழங்களை உட் கொள்ளல் மூலம் உங்கள்

உடலுக்குத் தேவையான சகல விதமான ஊட்டச்சத்துக்களை இலகுவில் பெற்றுக்கொள்ளலாம். அது மட்டுமல்ல அதிகமான சக்தி கிடைக்கும்போது களைப்பு என்பது விரட்டியடிக்கப்படுவதை உணர்வீர்கள்.

காய்கறிகளை அழையுங்கள்

வெள்ளை முள்ளங்கி, வாழைத் தண்டு இவைகளை பொடி பொடியாக நறுக்கி, எலுமிச்சை சாறு, உப்பு இவைகளை சேர்த்து, பச்சையாக வெறும்வயிற்றில்
தொடர்ந்து சாப்பிட்டு வர, அங் கங்கே விழும் சதைமடிப்புகள் மறையும். வாழைத் தண்டை வாரத்திற்கு இரண்டு முறையாவது உணவுடன் சேர்த்துக்
கொள்ள உடல் பருமன் குறையும்.

பாகற்காய், முட்டைக் கோஸ், கேரட், முருங்கை காய், வாழைத் தண்டு உள்ளிட்ட காய் கறிகளை அடிக்கடி சேர்த்துகொள்வது உடல் எடையைகுறைக்க உதவும்




வெள்ளைப் பூண்டு உடல் எடை குறைப்பு

இந்திய உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தும் பூண்டை, தூக்கிப்போடாமல் அதனை சாப்பிட்டால் உடல் எடை கண்டிப்பாக குறையும். நிறைய பேர் பூண்டை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வரும், சுவையில்லை

என்று சாப்பிடாமல் தவிர்ப்பர்.
ஆனால் அத்தகைய பூண்டு உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மை கொண்டது. மேலும் உடலில் வாயுத் தொல்லை இருந்தாலும் சரியாகிவிடும்.
ஏனெனில் இதில் அலிசின் என்னும் பொருள் உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது. எப்படியெனில் அலிசின் (allicin) உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகளை உடலில் தங்கவிடாமல்

வெளியேற்றிவிடும்.

மேலும் இதில் சல்பர் இருக்கிறது. மேலும் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும்.

ஆகவே இதனை உண்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும். எனவே நீங்கள் என்னதான் கொழுப்புக்கள் நிறைந்த உணவை சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள். இதனால் உடல்

எடை குறைந்து இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

பழங்கள் எப்போதும்

*பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். பப்பாளிக் காயை கூட்டு, சாம்பார் செய்து சாப்பிடலாம்.

* முள்ளங்கியையும் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.

* இஞ்சியை இடித்து சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில்

ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

* வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில், ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.

* தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக்

கொள்வது நல்லது.

*சீசனல் ப்ரூட்ஸ் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

* சிட்ரஸ் பழங்கள் என்று சொல்லக்கூடிய அரஞ்சு சாத்துக்கொடி பழங்களை சாப்பிடுவதும் சிறந்தது. (ஜூஸ் இல்ல , பழமாக சாப்பிடணும்)



இந்த ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தில் சிக்கி நம் உடல் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது எதை தொட்டாலும் கலோரி கலோரின்னு பயமுறுத்துறாங்க பட்டினி கிடந்தாலும் உடல் ஊதிவிடும்ன்னு யோசனை

சொல்றாங்க அப்ப என்னதான் வழின்னு பார்த்தா இயற்கை உணவுகள்ல நிறைய வசதிகள் இருக்கு இதுல எந்த பக்கவிளைவுகளும் இல்லை செலவும் குறைவு கீழே உள்ள சில யோசனைகளை பயன்படுத்திப்

பாருங்கள்

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம்

அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம்

பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.

இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம்

நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.

தினமும் ஏதாவதுவும். சர்க்கரை ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிட சேர்த்தால் பழத்தின்

முழு சத்தும் குறைந்து விடும்.

எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.
இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.

உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.
மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.

அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான். புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.
பழங்கள் சாப்பிடும் முறை:

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.
இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.
உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.  அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு

முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.
பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.  அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

நவீன முறை உடல் மெலிவு


7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை:

ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon ஐட்டம்ஸ் அதிகம்

பயன்படுத்துங்கள்.(பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்)

நாள் 2: முழு நாளும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சமைத்தோ சமைக்காமலோ விருப்பம் போல் சாப்பிடலாம். சமைக்கும்போது எண்ணெய், தேங்காய்க்

கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. காலை உணவுக்குப் பெரியதொரு உருளை கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும்.

நாள் 3: பழ வகைகளும் காய்கறிகளும் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் கூடாது. உருளை கிழங்கு கூடாது.(பழச்சாறு கூடாது)

நாள் 4: முழு நாளுக்கு 8 வாழைப் பழங்கள் 3 குவளை பால். தேவையெனில் ஒரு குவளை காய்கறி சூப் சாப்பிடலாம். சூப்பிற்கு எண்ணெய் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.

நாள் 5: ஒரு குவளை அரிசி சாதம் சாப்பிடலாம். 6 முழு தக்காளி சாப்பிட வேண்டும். இன்றைய நாளில் மற்ற நாட்களைவிட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் - குறைந்தது 12 குவளை.

நாள் 6: மற்றொரு காய்கறி நாள். சமைத்தோ சமைக்காமலோ சாப்பிடலாம். கண்டிப்பாக தேங்காய், எண்ணெய்ச் சமைக்கும்போது பயன்படுத்தக் கூடாது. உடன் ஒரு குவளை அரிசி சாதம்.

நாள் 7: 6 ஆம் நாளை போன்று அப்படியே செய்யவேண்டும். கூடுதலாக எல்லா வகை பழச்சாறுகளும் குடிக்கலாம். பழச்சாறு தயாரிக்கும்போது இனிப்பு பயன்படுத்தக்கூடாது.

தினசரி செய்யும் அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல், இந்த டயட்டை அப்படியே பின்பற்றினால் 8 ஆம் நாளில் 4-5 கிலோ எடை குறைந்திருப்பது உறுதி. அதிகப்படியாக குறைந்தது அரை மணி நேரம்

நடைப்பயிற்சியும் தினசரி எடுத்தால், குறைந்தது 6 கிலோ எடை குறைந்திருக்கும். சோம்பல், உடல் களைப்பால் தினசரி அலுவல்களில் ஏதாவது இந்த டயட் நாட்களில் செய்யாமல் நிறுத்தினால் 8 ஆம் நாளில்

எதிர்பார்க்கும் 4-5 கிலோ குறைவு இருக்காது. ஆனால், குறைந்தது 3 கிலோ குறைவது உறுதி!

மூன்றாம் நாளிலிருந்து உடல் களைப்பு அதிகம் இருக்கும். தினசரி அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல் தொடர்பவராக இருப்பின் நான்காம் நாள் மதிய வேளைகளில் உடல் தளர்ந்து விடும். அன்றைய தினம்

கடந்து விட்டால், 6-7 ஆம் தினங்களில் உடலின் சுறுசுறுப்பு திரும்பக்கிடைத்து விடும்.




முதல் நாள்: எந்த பழங்களும் ( வாழை பழம் தவிர்த்து ) சாப்பிடலாம்- தர்பூசணி சற்று அதிகமாக

இரண்டாம் நாள்: அவித்த, உப்பு சேர்த்த உருளை கிழங்கு சாப்பிடலாம். தவிர சமைத்த/ சமைக்காத காய்கறிகள் (சாலடுகள்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம்.

மூன்றாம் நாள் : பழங்கள் + காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம் ( தவிர்க்க வேண்டியவை: வாழை பழம் மற்றும் உருளை கிழங்கு)

நான்காம் நாள்: வாழை பழங்கள் + டம்ளர் பால் இரவு -வெஜிடபிள் சூப் குடிக்கலாம்

ஐந்தாம் நாள் :

காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். ஒரு பெரிய தக்காளி.

இரவு: நான் வெஜ் : பீப் (மாட்டு கறி)ஒரு பெரிய தக்காளி.

நாள் முழுதும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்

ஆறாம் நாள்:

காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். நிறைய காய்கறிகள்

இரவு: நான் வெஜ் : ஒரு கப் சாதம். பீப் (மாட்டு கறி)

ஏழாம் நாள்: நிறைய பழச்சாறு சமைத்த காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு
உடலின் எந்த நோய் இல்லாமலும் வேறு பிரச்சனை இல்லாமலும் இருப்பவர்களும் மட்டும் தான் இந்த ஏழு நாள் சோதனை எடுக்கணுமாம் ! ஒவ்வொரு நாளும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் !

எட்டாம் நாளில் ரிசல்ட் தெரிவது உறுதியாம் !

இந்த முறையில் எடை குறைய மிக எளிய காரணம் சொல்கிறார்கள்: ஒவ்வொரு நாளும் உணவு மூலம் நமக்கு தேவைப்படுவது ரெண்டாயிரம் கலோரிகள். இந்த முறை மூலம் தினம் 1200 கலோரிகள் மட்டுமே

கிடைப்பதால், ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைகிறது என்று கூறப்படுகிறது.





காலை: எழுந்த உடன் அத்திப்பழம். 5 பாதாம் , 2 டேட்ஸ் ; ஊற வைத்த வெந்தயம் தண்ணீரில் சாப்பிட வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்

காலை உணவு: Idli ராகி/ ஓட்ஸ் இவற்றில் ஏதேனும் ஒன்று அளவோடு சாப்பிட வேண்டும்.

காலை 11 மணிக்கு ; ஒரு டம்ளர் மோர்

மதியம்: 150 கிராம் காய்கறி, ஒரு கப் அரிசி சாதம், சாலட் இவை சாப்பிடலாம். அசைவம் எனில் வாரம் இரு முறை அளவோடு சாப்பிடலாம்

நான்கு மணிக்கு: கிரீன் டி. உப்பு கடலை அல்லது பொட்டு கடலை

எட்டு மணிக்குள்: சப்பாத்தி மற்றும் ஒரு கப் காய்கறி சாப்பிட வேண்டும்

இரண்டு மணி நேரம் கழித்து தான் உறங்க போக வேண்டும்.

இம்முறையில் ஒரு சில மாதத்தில் உடல் எடை குறைக்கலாம் .

நெல்லிக்காய் சிறப்பம்சம்

செய்முறை: ஐந்து பெரிய நெல்லிக்காய்கள் ஒவ்வொன்றையும் நான்கு துண்டுகளாக நறுக்கவும். தண்ணீரில் இந்த நெல்லிக்காய்த் துண்டுகளைக் கொட்டி மிதமாக வேகவைத்து, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

இதனுடன் ஒரு தக்காளியைக் கரைத்து ஊற்றி ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளவும். மல்லித்தூள், மிளகாய்த்தூள் தலா அரை டீஸ்பூன், சாம்பார் பொடி ஒரு டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் வெந்த துவரம்பருப்பை அதனுடன் ஊற்றி மீண்டும் கொதிக்கவைக்கவும். இந்தக் கரைசலுடன் கடுகு, வெந்தயம்,

கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிதத்தை சேர்த்து இறக்கினால் சுவையான நெல்லிக்காய் சாம்பார் தயார்.


செய்முறை: புதினா - கொத்தமல்லி - நறுக்கிய முள்ளங்கி தலா ஒரு கப் எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது உப்பு, சிட்டிகை மிளகுத்தூள், அரை கப் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொண்டால்

அதற்குப் பெயர்தான் புதினா மல்லி முள்ளங்கி ஜூஸ்.

வயதானவர்கள் இரவு நேரத்தில் அரிசி சாப்பாட்டை சாப்பிடுவதைவிடவும் சிற்றுண்டி உண்ணுவதே நல்லது. இது எளிதில் ஜீரணமாகும் என்பதால், பெரும்பாலும் என் வீட்டில் சிற்றுண்டிதான் செய்வோம். என்

மாமியாருக்குச் சர்க்கரை நோய் இருக்கிறது. அவருக்காக கோதுமை மாவுடன் ஓட்ஸ் கலந்து சப்பாத் தியாகச் செய்வோம். இதனால் காலை ஆறு மணி வரை பசி எடுக்காமல் இருக்கும். இதனுடன் தக்காளி, இஞ்சி,

கொத்தமல்லி அரைத்துச் சேர்க்கும்போது மேலும் சுவையாக இருப்பதோடு, உடல் பருமனையும் குறைக்கும். வெள்ளரி தயிர் ரெய்தாவைத் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
செய்முறை: ஒரு துண்டு இஞ்சி, வெங்காயம் - தக்காளி - பச்சை மிளகாய் தலா ஒன்று, அரைக் கட்டு கொத்தமல்லி ஆகிய வற்றைப் பொடியாக நறுக்கி மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனுடன் கோதுமை மாவு,

ஓட்ஸ் இரண்டையும் தலா ஒரு கப் கலந்து, தேவையான உப்பு சேர்த்துப் பிசையவும். (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்). இந்தக் கலவையை சப்பாத்தியாக தோசைக்கல்லில் சுட்டு எடுக்கும்போது

சிறிது எண்ணெய் விட்டு, வேக வைக்கவும்.

முள்ளங்கி மகத்துவம்

முள்ளங்கி தோல் சீவி ஜூசரில் போட்டு வடி கட்டுங்க. கூட உங்களுக்கு பிடிச்ச ஃப்ளேவர்( புதினா இலை, கொத்தமல்லி இலை, இஞ்சி) வர மாதிரி எதாவது போட்டு காரத்துக்கு பெப்பர் அப்புறம் உப்பும்

சேர்த்துக்குங்க.

முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரகக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும்.

இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.

இந்த முள்ளங்கியால் வாத நோய், நீர்வடியும் படையான கரப்பான், வயிற்றெரிச்சல், நரம்பு சூலை எனப்படும் உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி

ஆகியன குணமாகும்

சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கொர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் சேர்க்க வேண்டும். பொரியல், சாம்பார்

எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது.

இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது சாப்பிடும்போது உணவில் புளி தவிர்க்கவும். மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். பிற

மருந்துகளோடு இது இந்த நோய்களுக்குத் துணை மருந்தாகும்.

கருவுற்ற தாய்மார்கள் இதனை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு எளிதாகும். சிறுநீர் மிகுதியும் கழியும். கை, கால் வீக்கம் வராது.

இதன் விதையைக் குடிநீராக – காசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி உண்டாகும்.

உடல் எடை குறைய - சில எளிய வழிகள்

கீழ்க்கண்ட உணவு முறைகளை கையாண்டால் மாதம் குறைந்தது
5 கிலோ குறையும்.

காலையில் எழுந்ததும் சூரியக் குளியலை ரசித்தபடி 6 தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அல்லது இரவு ஒரு செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி
அதில் பத்து கிருஷ்ணா துளசிகளைப் போட்டு ஊறவைக்கவும். காலையில் துளசிகளை அதிலிருந்து வெளியே எடுத்து துளசி குணம்
நிறைந்த நீரை மென்சூடாக்கி பிறகு வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

காப்பிக்குப் பதில் பால் இல்லாத சுக்குக் காப்பி சிறிது பனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

ஒரு மணி நேரம் கழித்து ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்சை பழம் பிழிந்து ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும்.

காலை 8.30 – 9.30 மணியளவில்: காலையில் எந்தவிதமான மாவு ஆகாரமும் சேர்க்கக் கூடாது. பசி தாங்க முடியாதவர்கள் 1 தம்ளர்
கேழ்வரகு கஞ்சி அல்லது பார்லி கஞ்சி சாப்பிடலாம்.

சாத்துக்குடி ஜூஸை கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடலாம். 2 கேரட்களை கொதிக்கும் வெந்நீரில் போட்டு, கொதிக்க வைத்து,
ஆறவைத்த தண்ணீரில் கழுவி சிறு துண்டுகளாக்கி சிறிது மிளகு தூள் போட்டுச் சாப்பிடலாம்.

காலை 10.30 – சாம்பல் பூசணி ஜூஸ் அல்லது முள்ளங்கி ஜூஸ்

காலை 11.00 – ஊறவைத்த அவல் + நாட்டுச் சர்க்கரை + பொடி செய்யப்பட்ட வாழைப்பழம் + வாசனைக்காக ஏலக்காய்…
அனைத்தும் கலந்து அப்படியே சாப்பிடவும். (பச்சை வாழைப்பழத்தைக் கவனமாகத் தவிர்த்து விடவும்).

மதியம் சாப்பாடு: மதியம் சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன் காய்கறி சாலட் சாப்பிடவும்.

மதிய உணவிற்கு கீரையைப் பாதி வேகவைத்த நிலையிலேயே சமைத்து அதில் ஊறவைத்த பச்சைப் பாசிப் பருப்பு சேர்த்து
அரிசியைக் குறைத்து நிறையக் காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம்.

மாலை 3 – 4 மணி : முளைவிட்ட தானியங்கள் ஏதாவதொன்றை 4 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு அதில் கொத்துமல்லி, புதினா இலைகள்,
எலுமிச்சைச் சாறு பிழிந்து சாப்பிடலாம். காப்பிக்குப் பதில் சுக்கு, கொத்துமல்லி கலந்த காப்பி சாப்பிடவும்.

மாலை 6 மணி : சிறிது வேகவைத்த முளைவிட்ட தானியத்தைச் சாப்பிடவும். பால் கலக்காத டீ சாப்பிடலாம்.

இரவு 7.30 மணி: சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பு பச்சைக் காய்கறிகள் சாப்பிடுங்கள். கவனம், எண்ணெயில் குளிப்பாட்டும்
உணவுகளைத் தவிர்த்த இரவு உணவு இருக்க வேண்டும்.

பசும்பாலுக்குப் பதில் சோயா பால் சாப்பிடலாம்.