Saturday, May 3, 2014

செலரி - செலரிக்கீரை பற்றிய தகவல்கள்

செலரி காரட் பொரியல்


    செலரி - ஒரு கட்டு
    கேரட் - 2
    பெரிய வெங்காயம் - பாதி
    மிளகு தூள் - அரை மேசைக்கரண்டி
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - தாளிக்க
    தாளிக்க:
    கடுகு - சிறிது
    சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
    கடலை உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - 5 இதழ்

   
   

காரட்டை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். செலரியை கழுவி தண்டின் பின், மேற்புறத்தில் இருந்து தண்டின் நுனி வரை இருக்கும் நாரினை கத்தியால் உரித்து எடுத்து செலரியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாக நறுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும்.

பின் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

அதில் காரட்டை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.

5 நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய செலரியை உப்புடன் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்.

சத்தான செலரி பொரியல் ரெடி. மிளகாய் தூளை தூவவும். யூஎஸ்ஸில் செலரியை சூப் செய்து குடிப்பார்கள். ஜீரோ கேலரி. மிகவும் சத்தான சைவ உணவு.



 தக்காளி செலரி ஜூஸ்
 தேவையான பொருட்கள்.....

*  தக்காளி - 3   
* செலரி தண்டு - சிறிது   
* உப்பு - தேவைக்கேற்ப   
* சுகர் லைட் - தேவைக்கேற்ப   
* எலுமிச்சை ஜூஸ் - சிறிது   
* பெப்பர் - சிறிது

செய்முறை.......

* தக்காளி, செலரி கழுவி கொள்ளவும்.   
* மிக்ஸியில் தக்காளி,செலரி தண்டு,உப்பு,சர்க்கரை,எலுமிச்சை ஜூஸ்,பெப்பர் சேர்த்து அரைக்கவும்.   
* பின் அதை வடிகட்டி பரிமாறவும்.



இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி செலரி (Celery) என்பது சாலட் கீரை வகையைச் சேர்ந்ததாகும். இதைச் சமைக்காமலேயே சாப்பிடலாம்.

செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் கீரைத்தண்டு மாதிரி அடிக்கடி இதைச் சமைத்துச் சாப்பிடும் காலம் ஆரம்பமாகிவிட்டது.

காளானைப் போலவே இதுவும் ஓர் அரிய காய்கறியாகும். 1994 ஆம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மின்க்லீ என்பவர் இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டார். தினமும் அவர் இரண்டு செலரித் தண்டுகள் வீதம் ஒரு வாரம் வரை சாப்பிட்டு, அத்தொல்லையிலிருந்து குணமாகி இயல்பான நிலைக்கு வந்துவிட்டார். இவர் மகன் குலாங் டிலீ, ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர். இவர் செலரியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு வித இரசாயனப் பொருளை ஊசி மூலம் எலிகளுக்கு ஊட்டினார். அந்த எலிகளின் இரத்த அழுத்தம் 12 முதல் 14 சதவிகிதம் வரை குறைந்திருந்தது. இரத்த அழுத்தம் குறைகிறதே என்று இதை அதிகமாகச் சாப்பிடவும் கூடாது. இந்த உண்மையையும் இவர் கண்டுபிடித்துள்ளார். அளவுடன் செலரியை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்த நோயைப் பரிபூரணமாகக் குணமாக்கிக் கொள்ளலாம்.

குணமாகும் நோய்கள்!

உணவு செரிமானமின்மை, ஆஸ்துமா, இரத்த சோகை, சாகேமியா, உடற் பலவீனம், இதய நோய்கள், சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், தூக்கமின்மை, மூட்டு வாதம், ஊளைச்சதை, நரம்புக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் முதலிய நோய்களை செலரித் தண்டுகள் குணப்படுத்துகின்றன.

‘திடீர்’ நெஞ்சுவலி இனி இல்லை!

இதில் உள்ள மக்னீசியமும், இரும்புச் சத்தும் குறிப்பிடத்தக்கவை. அவ்விரண்டும் அதிக அளவில் இருப்பதால் இரத்த சோகை, லூகேமியா முதலிய நோய்கள் உடனே குணமாகின்றன. இரத்த விருத்தியும் விரைந்து ஏற்படுகிறது.

இதயமும், இதயத்திற்குச் செல்லும் நரம்புகளும் தடையின்றி இயங்க மக்னீசியம் கூடுதலாகத் தேவை. அந்தத் தேவையை செலரியில் உள்ள மக்னீசிய உப்புகள் பூர்த்தி செய்துவிடுகின்றன. இதனால் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன.

100 கிராம் செலரியில் கிடைக்கும் கலோரி 37 ஆகும். இதன் இலைகளில் 88% ஈரப்பதமாகும்; புரதம் 6.3%, கொழுப்பு 0.6%, நார்ச்சத்து 1.4%, கார்போஹைடிரேட் 1.6%, தாது உப்புகள் 2.1% ஆகும். தாது உப்புகளும் வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவற்றுடன் வைட்டமின் – ‘ஏ’, வைட்டமின் – ‘பி’ வைட்டமின் – ‘சி’ போன்றவையும் இருப்பதால் இது ஓர் அடிப்படை உணவும் ஆகிறது.

உடல் வளர்ச்சிக்குப் புரதம் தேவை. பிற காய்கறிகளில் அதிக பட்சம் 2% முதல் 3% வரை புரதம் உள்ளது. ஆனால், அது செலரியில் 6.3% ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காரணங்களால் (தாது உப்புகளால்) இரத்தத்தில் புளிப்பு ஏற்பட்டு இரத்தம் கெட்டுவிடுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் இரத்தத்தில் நஞ்சுப் பொருள்கள் சேர்வதும் தடை செய்யப்படுகிறது. மேலும் கீல் வாதம், ஊளைச் சதை நோய் போன்றவையும் குணப்படுத்தப்படுகின்றன.

செலரியின் தண்டுகளையும் இலைகளையும் சூப்பாகத் தயார் செய்து சாப்பிடலாம்; இல்லை எனில் சாறாக மாற்றி அருந்தலாம். செலரியின் விதையும் மருத்துவக் குணங்கள் நிரம்பியது. அதைக் சாறாக்கி வாத நோய்க்காரர்கள் அருந்தலாம்.

நரம்புக் கோளாறுகளுக்கு….

வலிப்பு நோயால் ஏற்பட்ட இசிப்பு நோய், நரம்புத் தளர்ச்சி நோய் முதலியவை குணமாகும். இதற்காகச் செலரித் தண்டு, இலை ஆகியவற்றின் சாற்றை காரட் சாறுடன் சேர்த்து அருந்த வேண்டும். இந்த முறையில் தினமும் ஒரு வேளை அருந்தினால் நரம்பு நோய்கள் குணமாகும்.

புற்றுநோய், நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, தொண்டை தொடர்பான நோய்கள் ஆகியன குணமாகச் செலரி சூப் அருந்த வேண்டும். அல்லது இலை, தண்டு ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கிச் சாப்பிட வேண்டும்.

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்கவும் இத்தண்டு பயன்படுகிறது. வாரத்திற்கு நான்கு நாள்களாவது செலரியைச் சமையலில் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படா. கற்கள் இருந்தாலும் இது கரைத்துவிடும்.

யுனானி வைத்தியத்தில் செலரி வேரைச் சிறுநீரகக் கற்களைக் கரைக்க மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

சோடியம் உப்பு அதிகமாய் இருப்பதால் இது மூட்டு வீக்க நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலைகளையும் மெல்லிய தண்டுகளையும் சாறாக்கி அருந்த வேண்டும். இந்த முறையில் அருந்தினால் மூட்டு வீக்கம் குணமாகும்.

சத்துணவு டானிக்!

உடல் பலவீனமானவர்களுக்கும் சத்துணவுக் குறைவால் ஊட்டம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் எளிய டானிக் ஒன்று இருக்கிறது.

அது இதுதான்.

செலரியின் வேரைக் காய வைத்துப் பொடியாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி பொடியுடன் அதே அளவு தேனும் சேர்த்துச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு வேளை இப்படிச் சாப்பிட்டால் உடல் பலன் பெறும்.

‘சாலட்’ செய்வது உண்டா?

மிகவும் நறுமணமுள்ள காய்கறி இது. எனவே, இதை மற்றக் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தால் மணமும் ருசியும் முன்னணியில் நிற்கும்.

வெள்ளரிக்காய், தக்காளி, முள்ளங்கி, காரட் போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு சாலட் (Salad) செய்வார்கள். இதில் செலரியின் இலைகளையும், தண்டுகளையும் வெட்டிப் போட்டு எலுமிச்சைச் சாற்றையும் கலக்க வேண்டும். பச்சைக் காற்கறிகள் சேர்த்த இந்த சாலட் சத்துணவாக ஆகிவிடுகிறது.

செலரியின் கொட்டைகள் சிறுநீர் நன்கு பிரிய பயன்படுகின்றன. வயிற்றுப் பொருமலைக் குணமாக்குகின்றன. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. நரம்புத் கோளாறுகளைக் குணமாக்குகின்றன. இந்த விதைகளைக் காயவைத்து இடித்துத் தூளாக வைத்துக்கொண்டு தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும்.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட செலரியின் தாயகம் சீனாதான். கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இருந்தே செலரியை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் இதே காலகட்டத்தில் செலரியைப் பயிர் செய்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் செலரியின் மருத்துவக் குணங்களுக்காகத் தோட்டங்களில் வளர்க்க ஆரம்பித்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்புதான்.

செலரியை அடிக்கடி உணவில் சேர்த்து உடல் உறுதி பெறுவோம்


செலரி என்ற கீரை வகையானது சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.  கொத்தமல்லியை உணவில் பயன்படுத்தப்படுவதைப்போல இந்த செலரி கீரை சீனாவில் பயன்படுத்தப்படுகிறது. கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இருந்தே செலரியை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் இதே காலகட்டத்தில் செலரியைப் பயிர் செய்திருக்கிறார்கள்.

செலரியின் மருத்துவக் குணங்களுக்காகத் 300 ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் தோட்டங்களில் வளர்க்க ஆரம்பித்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த கீரை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக உபயோகப் பயன்படுத்தப்படுகின்றன. சாலட்களிலும், காலிப்ளவர், காளான் மஞ்சூரியன் உணவுகளிலும் அதிகம் சேர்க்கப்படுகிறது.

செலரியில் உள்ள சத்துக்கள்

செலரியில் 88 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, மாவுப்பொருள், தாது உப்புக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை காணப்படுகின்றன. இவற்றுடன் வைட்டமின் – ‘ஏ’, வைட்டமின் – ‘பி’ வைட்டமின் – ‘சி’ போன்றவையும் இருப்பதால் இது ஓர் அடிப்படை உணவும் ஆகிறது. செலரியில் மக்னீசியமும், இரும்புச் சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.

சாலட் சத்துக்கள்

மிகவும் நறுமணமுள்ள செலரியினை மற்றக் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தால் மணமும் ருசியும் முன்னணியில் நிற்கும். வெள்ளரிக்காய், தக்காளி, முள்ளங்கி, காரட் போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு சாலட் செய்வார்கள். இதில் செலரியின் இலைகளையும், தண்டுகளையும் வெட்டிப் போட்டு எலுமிச்சைச் சாற்றையும் கலக்க வேண்டும். பச்சைக் காற்கறிகள் சேர்த்த இந்த சாலட் சத்துணவாக ஆகிவிடுகிறது.

இதயநோய்கள் குணமடையும்

இதயமும், இதயத்திற்குச் செல்லும் நரம்புகளும் தடையின்றி இயங்க மக்னீசியம் கூடுதலாகத் தேவை. அந்தத் தேவையை செலரியில் உள்ள மக்னீசிய உப்புகள் பூர்த்தி செய்துவிடுகின்றன. இதனால் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன. இரத்த சோகை, லூகேமியா முதலிய நோய்கள் உடனே குணமாகின்றன.

இரத்த விருத்தியும் விரைந்து ஏற்படுகிறது. செலரியில் உள்ள தாது உப்புக்களால் இரத்தத்தில் புளிப்பு ஏற்பட்டு இரத்தம் கெட்டுவிடுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் இரத்தத்தில் நஞ்சுப் பொருள்கள் சேர்வதும் தடை செய்யப்படுகிறது. மேலும் கீல் வாதம், ஊளைச் சதை நோய் போன்றவையும் குணப்படுத்தப்படுகின்றன.

ரத்த அழுத்தம் குணமடையும்

உணவு செரிமானமின்மை, ஆஸ்துமா, இரத்த சோகை, சாகேமியா, உடற் பலவீனம், இதய நோய்கள், சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், தூக்கமின்மை, மூட்டு வாதம், ஊளைச்சதை, நரம்புக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் முதலிய நோய்களை செலரித் தண்டுகள் குணப்படுத்துகின்றன. அளவுடன் செலரியை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்த நோயைப் பரிபூரணமாகக் குணமாக்கிக் கொள்ளலாம்.

புற்றுநோய்க்கு செலரிசூப்

செலரியின் தண்டுகளையும் இலைகளையும் சூப்பாகத் தயார் செய்து சாப்பிடலாம்; இல்லை எனில் சாறாக மாற்றி அருந்தலாம். புற்றுநோய், நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, தொண்டை தொடர்பான நோய்கள் ஆகியன குணமாகச் செலரி சூப் அருந்த வேண்டும். அல்லது இலை, தண்டு ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கிச் சாப்பிட வேண்டும்.

நரம்பு நோய்களுக்கு செலரி சாறு

செலரித் தண்டு, இலை ஆகியவற்றின் சாற்றை காரட் சாறுடன் தினமும் ஒரு வேளை அருந்தினால் நரம்பு நோய்கள் குணமாகும்.வலிப்பு நோயால் ஏற்பட்ட இசிப்பு நோய், நரம்புத் தளர்ச்சி நோய் முதலியவை குணமாகும். செலரியின் விதையும் மருத்துவக் குணங்கள் நிரம்பியது. அதைக் சாறாக்கி வாத நோய்க்காரர்கள் அருந்தலாம்.

சிறுநீராக கற்கள் கரையும்

செலரியின் கொட்டைகள் சிறுநீர் நன்கு பிரிய பயன்படுகின்றன. வயிற்றுப் பொருமலைக் குணமாக்குகின்றன. இந்த விதைகளைக் காயவைத்து இடித்துத் தூளாக வைத்துக்கொண்டு தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும். தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வம் ஏற்படும்.

மூட்டுவீக்கம் குணமாகும்

சோடியம் உப்பு அதிகமாய் இருப்பதால் இது மூட்டு வீக்க நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலைகளையும் மெல்லிய தண்டுகளையும் சாறாக்கி அருந்த வேண்டும். இந்த முறையில் அருந்தினால் மூட்டு வீக்கம் குணமாகும்.சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்கவும் இத்தண்டு பயன்படுகிறது. வாரத்திற்கு நான்கு நாள்களாவது செலரியைச் சமையலில் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படா. கற்கள் இருந்தாலும் இது கரைத்துவிடும்.

உடல் பலம் பெறும்

செலரியின் வேரைக் காய வைத்துப் பொடியாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி பொடியுடன் அதே அளவு தேனும் சேர்த்துச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு வேளை இப்படிச் சாப்பிட்டால் உடல் பலன் பெறும். உடல் பலவீனமானவர்களுக்கும் சத்துணவுக் குறைவால் ஊட்டம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் இது எளிய டானிக் ஆகும்

Friday, April 25, 2014

கம்பு குறித்த ஒரு பார்வை

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம். நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர்.

காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்து இல்லாத உணவுகளை சாப்பிட்டு வந்தனர்.

நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது. இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும்.

இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர்.

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.    

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

*  கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

*  இதயத்தை வலுவாக்கும்.

*  சிறுநீரைப் பெருக்கும்.

*  நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

*  இரத்தத்தை சுத்தமாக்கும். 

*  உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

*  நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

*  தாதுவை விருத்தி செய்யும். 

*  இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

Thursday, April 24, 2014

ஆப்ரிகாட் - உலர்பழம்

பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய ஆப்ரிகாட் பழங்கள் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிற பழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது. தோல்நோய்களை நீக்கும் இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப்பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்த வல்லவை. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள விட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.

வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. நரம்புகளை வலுப்படுத்தும் பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது. லைகோபின் என்னும் சத்தானது செல் முதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் குழந்தைகளுக்கு ஏற்றது. இருதய நோய், சிலவகை புற்றுநோயை கூட எதிர்த்து போராடும் சத்துக்கள் அடங்கிய பழம் இது. ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசிக்கவோ செய்யலாம்.

பின்னர் பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும் தீயை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து குழந்தைக்கு ஊட்டவும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கண்பார்வை தெளிவாகும் வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகப் படுத்துகிறது. தினமும் 1 அல்லது 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவும் கட்டுப்படுத்தப்படும். மலைவாழைப்பழம்-1, ஆப்ரிகாட்-4 ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தயிர்-அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, இரவில் படுக்கும்பொழுது சாப்பிட்டுவர பார்வைதிறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும்.

  ஆப்ரிகாட் பழங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களை எவ்வகையிலும் பாதிக்காமல், அதன் நீர்ச்சத்துக்களை மட்டும் ஆவியாக்கி உலர வைப்பதால் கிடைப்பது தான் உலர் ஆப்ரிகாட் பழங்கள். இப்பழங்களின் ஊட்டச்சத்துக்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாததினால், மேலும் பலவித நன்மைகளை உலர் ஆப்ரிகாட்களிலிருந்து நீங்கள் பெறலாம். இப்பழங்களில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற பல்வேறு சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
 
  ஒரு கப் உலர் ஆப்ரிகாட்டில் சுமார் 158 மைக்ரோகிராம் அளவு வைட்டமின் ஏ சத்து உள்ளது. இந்த உலர் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடல்லாமல், பலவகையான நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தியையும் உடலுக்கு வழங்க வல்லவை. இயற்கையின் அருங்கொடையான இந்த பழத்தைப் பற்றிய 12 சிறந்த நற்பயன்களைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.

 இரும்புச்சத்து நிறைந்த உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சோகைக்கு எதிராக போராடுவதற்கு உதவக்கூடியவையாகும். மேலும் இரும்புச்சத்தை உறிஞ்சக்கூடியதான செம்பும் இதில் நிறைந்துள்ளது. தினசரி உணவில் உலர்ந்த ஆப்ரிகாட்களை சேர்த்துக் கொள்வது, மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கினால் அவதிப்படும் பெண்களுக்கு நன்மை பயக்கக்கூடியதான இரத்த சிவப்பணு உற்பத்திக்கு மிகவும் நல்லது.

 உலர் ஆப்ரிகாட்கள் பொட்டாசியத்தின் மிகச்சிறந்த மூலாதாரமாக விளங்குகின்றன. தாதுப்பொருளான பொட்டாசியம், திரவ சமநிலையை சீராக்கக்கூடிய எலக்ட்ரோலைட்டாகத் திகழ்வதோடு, தசை செயல்பாடு மற்றும் இதயத்துடிப்பை ஒழுங்காக்குவதற்கும் உதவுகிறது.

 உலர் ஆப்ரிகாட்கள் கூர்மையான கண்பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ போன்ற சத்துக்களை உள்ளடக்கியுள்ளன. சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆன வைட்டமின் ஏ சத்து, கட்டற்ற மூலக்கூறுகளை அகற்றுவதோடு, உயிரணுக்கள் மற்றும் திசுக்களின் ஆரோக்கியத்தை பேணி காப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. கட்டற்ற மூலக்கூறுகளின் அழிவு, மனித கண் விழியாடியை பாதித்து, கண்புரை நோய்கள் அல்லது வேறு ஏதேனும் வகையில் கண்களுக்கு பாதிப்பு உண்டாக்கும். உலர் ஆப்ரிகாட் உட்கொள்வது கண்புரை நோய் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறை கணிசமாகக் குறைக்கும்.

 காசநோய், ஆஸ்துமா மற்றும் மார்புச்சளி உள்ளிட்ட நோய்களின் அறிகுறிகளை நிவர்த்திக்கக்கூடிய ஆற்றல், உலர் ஆப்ரிகாட்களின் ஆரோக்கிய நற்பலன்களுள் ஒன்றாகும்.


பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய ஆப்ரிகாட் பழங்கள் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப்பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்த வல்லவை.

இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள விட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது.

ஆப்ரிகாட் பழங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லதோ, அதே அளவு சருமத்திற்கும் சிறந்தது. அதிலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் ஏ என்னும் சத்து அதிகமாக உள்ளது. எனவே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும். மேலும் இதில் இயற்கையான எண்ணெய் உள்ளது.

அதாவது இதனை சாப்பிட்டால், சருமத்தை பாதுக்காக்கும் வகையில் ஒரு படலத்தை உருவாக்கும். ஆகவே 2 ஆப்ரிக்காட் பழங்களை மசித்துக் கொண்டு, அதில் சிறிது தயிர் ஊற்றி, கலந்து, பின் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமெனில் இதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்தும் தடவலாம்.


    ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசிக்கவோ செய்யலாம். 10 நிமிடம் வெந்தால் போதுமானது.
    பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும் தீயை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து குழந்தைக்கு ஊட்டவும்.



அத்திப்பழம் அடேங்கப்பா

கூம்பு வடிவத்தில் உள்ள அத்திப் பழங்கள் அகண்ட, சப்பட்டையான அடிப்பாகத்துடன் உள்ளன. பழுத்தவுடன் மேல் பாகம் வளைந்து கழுத்து போல தோற்றமளிக்கிறது. ப்ரௌன், ஊதா, பச்சை, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களிலும் பல அளவுகளிலும் உள்ளன. சுருக்கங்கள் நிறைந்த தோல் கொண்ட இந்தப் பழம் சீக்கிரம் அழுகிப்போகும் தன்மை உடையதால், பெரும்பாலும் காய்ந்த வடிவத்திலேயே கிடைக்கிறது.

அத்திப் பூக்கள் பழத்தின் உள்ளேயே உருவாவதால் நம்மால் காண முடியாது. சிலர் இந்த பழத்தைப் பார்த்தாலே ஓடிவிடுவார்கள். ஆனால் இதில் உடல் ஆரோக்கியம் தரும் பைட்டோ நியூட்ரியன்ட்டுகளும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும், தாதுக்களும் அத்திப் பழத்தில் அதிகமாக உள்ளன. குறிப்பாக உலர் அத்திப்பழத்தில் இன்னும் நிறைய நன்மைகள் நிறைந்திருப்பதோடு, இன்னும் சுவையானதாக இருக்கும். எனவே இந்த பழத்தை அதிகம் உணவில் சேர்த்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். சரி, இப்போது அந்த அத்திப் பழத்தின் உடல்நல நன்மைகளைப் பற்றி பார்ப்போமா!!!

நார்ச்சத்து அதிகமிருக்கும் பழங்களையும், உணவுகளையும் உண்ணுதல் எடை குறைப்புக்கு மிகவும் உதவும். அதிக நார்ச்சத்து உணவுகளை உட்கொண்ட பெண்கள் கலோரி அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் அவர்களின் பசியும் கட்டுப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே நார்ச்சத்து அதிகமாக உள்ள அத்திப் பழம் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது.

 நார்ச்சத்து அதிகமுள்ள அத்திப்பழத்தில் பெக்டின் என்ற கரைந்த நார்ச்சத்து உள்ளது. இது ஜீரணத்தின் போது உடலின் உள்ளே உள்ள கொழுப்பை வெளியேற்றுகிறது. தினமும் அத்திப்பழம் சாப்பிடுவது கொழுப்பைக் குறைக்க உதவும். உப்பு வடிவத்தில் சோடியம் அதிகமாகவும், பொட்டாசியம் குறைவாகவும் உட்கொள்ளும் மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருகிறது. அத்திப் பழங்களில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. எனவே அத்திப் பழங்கள் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கும்.

 ஜீரணத்திற்கு அத்திப்பழங்கள் பெரிதும் உதவுகின்றன. தினமும் அவற்றை உட்கொள்வது சிறப்பான ஜீரணத்திற்கு உதவி, மூலநோயில் இருந்து காக்கிறது.

 அதிசயமாக கிடைக்கும் அத்திப்பழம் பல்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளது. சீசனில் மட்டுமே கிடைக்கும் இந்த பழத்தை உண்பதன் மூலம் உடல் சுறுசுறுப்படைகிறது. இதில் சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகை உண்டு. அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்: புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் அத்திப்பழத்தில் அடங்கியுள்ளன.

 உடல் எடையை குறைக்கும் உடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க அத்திப்பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது.

தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைந்தவர்கள் இரவு நேரத்தில் பால் அருந்தும் போது மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டுவிட்டு படுத்தால் பாலுணர்வு அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்கள் அத்திப்பழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப்பழத்தைத் தின்பதால் வெட்டை நோய் குணமடைகிறது.

 கால் விரல்களில் உண்டாகும் ஒரு வித நோயையும் வராமல் தடுக்கிறது. எலும்புகளை பலப்படுத்தும் அத்திப்பழம் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. தினசரி 2 பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலும் வளர்ச்சி அடையும். கால்சியம் அதிகம் காணப்படுவதால் எலும்புகளை பலப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் அதிகமாக சிறுநீர் கழிப்பதன் மூலம் ஏற்படும் கால்சியம் இழப்பினை ஈடுசெய்கிறது.

 கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும். தினமும் இரவு நேரத்தில் 5 அத்திப்பழம் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கலை குணமாகும் வயதானவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும். தொண்டை எரிச்சலை போக்கும். இருமல், ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது. செரிமான கோளாறினால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்துகிறது. பித்தத்தைத் தணித்துச் சமப்படுத்துவதில் அத்திப்பழம் தனிச்சிறப்பு வாய்ந்தது.

சீமை அத்திப்பழம் பதப்படுத்தப்பட்ட அத்திப்பழம் சீமை அத்திப்பழம் எனப்படும். இது வெண்குஷ்டத்தை குணமாக்கும். அரைகிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டால் வெண்புள்ளிகள், வெண்குஷ்டம், தோலின் நிறமாற்றம் போன்றவை குணமடையும். சீமை அத்திப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டு வந்தால் ஒருவருடைய உடல் பலமேறும்

Sunday, April 20, 2014

ப்ரோக்கோலி சமையல் குறிப்புகள்


    ப்ரோக்கோலி - ஒன்று
    பெரிய வெங்காயம் - ஒன்று
    இஞ்சி - சிறிது
    பூண்டு - 5 பல்
    வரமிளகாய் - 2
    கொத்தமல்லி தழை - சிறிது
    உப்பு - தேவைக்கு
    தாளிக்க :
    கடுகு - சிறிது
    கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
    எண்ணெய் - தாளிக்க


முதலில் ப்ரோக்கோலியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.மிளகாயை இரண்டாக கிள்ளிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் மல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.

ப்ரோக்கோலியை ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் சிறிது மல்லித் தழையை போட்டு வதக்கவும்

நன்கு வதங்கியதும் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பிறகு வேக வைத்த ப்ரோக்கோலியை போட்டு தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் பிரட்டி எடுக்கவும்.

சுவையான சத்தான பொரியல் ரெடி.





ப்ரோக்கோலி - 1 (சிறியது)
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1/2
உருளைக்கிழங்கு - 2
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1. ப்ரோக்கோலியை சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும்.உருளையை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. வெங்காயம், குடைமிளகாயை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் , குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. பின்னர் ப்ரோக்கோலி , உருளையை சேர்த்து வதக்கவும்.
5. தூள் வகைகள், உப்பு, தயிர் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
6. 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்..மூடி போட்டு வேக விடவும்.
7. காய்கள் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைக்கவும்.


சுவையான ப்ரோக்கோலி உருளை மசாலா தயார்.

அனைத்து குழம்பு வகைகளுக்கும் , வெரைட்டி  ரைஸ்க்கும் ஏற்ற பக்க உணவு..




பிரொக்கோலி -1 கப்
வெங்காயம் – அரை கப்
பூண்டு – 10 பற்கள்
ஆலிவ் ஆயில் – 2 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன்

செய்முறை:

 வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கிய பின்  ப்ரோக்கோலி போட்டு வதக்கவும்.

  பிறகு தண்ணீர் விட்டு வேக விடவும்.

  Corn flour மாவை நீர்க்கக் கரைத்து வேக விடவும்.

  இவை ஆறிய பிறகு மிக்சியில் போட்டு அரைக்கவும்.

  அரைத்த விழுதை சிறிது தண்ணீர் விட்டு,தேவையான அளவு உப்பு ,தேவையான அளவு மிளகுத் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

  மிகச் சிறிதளவு அஜினோமோட்டோ (1 pinch ) சேர்க்கவும்.

  பிறகு சூடாக பரிமாறவும்.

 சுவையான ப்ரோக்கோலி சூப் ரெடி.





தேவையான பொருட்கள்:

ப்ரோக்கோலி - 1 கப்

பூண்டு - 2 பல்

முட்டை - 3 (வெள்ளை கரு மட்டும்)

உப்பு - தேவையான அளவு

ஆலிவ் ஆயில் - சிறிதளவு

ப.மிளகாய் - 1

கோதுமை பிரட் - 4

செய்முறை :

 ப்ரோக்கோலியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 பூண்டை தோல் சீவி நசுக்கிக் கொள்ளவும்.

 ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து அதில் பூண்டு, ப.மிளகாய், ப்ரோக்கோலி போட்டு 4 நிமிடம் வதக்கி தனியாக வைக்கவும்.

 முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக ஒரு பவுலில் ஊற்றவும்.

 முட்டையில் 2 ஸ்பூன் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் அதில் வதக்கி வைத்துள்ள ப்ரோக்கோலி கலவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

 அடுப்பில் தோசை கல்லை வைத்து அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவைவை ஆம்லெட்டாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

 கோதுமை பிரட்டை டோஸ்ட் செய்து கொள்ளவும்.

 டோஸ்ட் செய்த பிரட்டின் நடுவில் இந்த ப்ரோக்கோலி ஆம்லெட்டை வைத்து பரிமாறவும்





ப்ரோக்கோலி - 1 பெரிய பூ
     கரட் - 1
     உருளை கிழங்கு - 1
     சிக்கென் குயூப் - 1 சிறியது
     உப்பு - சுவைக்கேற்ப
     பால் - 1 கப்
     நீர் - 1 கப்
     க்றீம் மில்க் 35% - 2 தே. கரண்டி


 கொடுக்கப்பட்டுள்ள எல்லா மரக்கறிகளையும் சிறிதாக வெட்டவும்.
     ஒரு பாத்திரத்தில் பால் , நீர்,சிக்கன் குயூப் மற்றும் வெட்டி வைத்த மரக்கறிகளையும் போட்டு அவிய விடவும்.
     மரக்கறி நன்றாக வெந்ததும் ப்ளென்டரில் (blender) போட்டு மை போல அரைக்கவும்.
     அரைத்ததை மறுபடியும் பாத்திரத்தில் ஊற்றி க்றீம் மில்க் கலந்து ஒரு கொதி வந்தததும் இறக்கவும்.
     உப்பு தேவையென்றால் போடவும்.

குறிப்பு:
சூப் தண்ணி போல் தேவை என்றால் சிறிது நீர் சேர்க்கலாம். சூப் தடிப்பாக தேவை என்றால் 3 தே. கரண்டி எண்ணை, 3 தே. மைதா கலந்து சூப் இறக்கு முன் விடலாம். இந்த கலவை விடும் போது கவனம் தேவை ஒரு கையால் கிளறிக்கொண்டே விடவும். இல்லா விட்டால் சூப் கட்டி பட்டுவிடும்.

Saturday, April 19, 2014

எப்போதும் பூண்டு - வைத்திய உலகத்தில் பூண்டு - பயன்பாடு

நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை  அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது.  பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து  தேய்த்து விடலாம. பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்  தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப்  ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும்  உடனே பறந்து விடும். உணவில் சேர்த்தால் நல்லது தான் ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து  விழுங்குவது நல்லதே.

தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள். சர்க்கரை  நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு  சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.

பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும்  பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.

அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும்,  அலர்ஜி போய் விடும். பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.

தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.
பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல்  பயமுறுத்துகிறது.

பல்வேறு காய்கறிகளும் அவற்றின் பலன்களும்


கத்தரிக்காய்
என்ன இருக்கு: விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து
யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும்.
யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.
முருங்கைக்காய்
என்ன இருக்கு: கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி.
யாருக்கு நல்லது: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.
யாருக்கு வேண்டாம்: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.
பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.
மாங்காய்
என்ன இருக்கு: நார்ச்சத்து, விட்டமின் ஏ
யாருக்கு வேண்டாம்: சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.
பலன்கள்: மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.
அவரைக்காய்
என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.
யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.
பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.
அத்திக்காய்
என்ன இருக்கு : விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
பலன்கள் : மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.
பீர்க்கங்காய்
என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்
யாருக்கு வேண்டாம் : யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.
பலன்கள் : உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
கோவைக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ.
யாருக்கு நல்லது : நீரிழிவு நோயாளிகளுக்கு.
பலன்கள் : வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.
புடலங்காய்
என்ன இருக்கு : உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பாகற்காய்
என்ன இருக்கு: பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது.
யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு.
யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.
பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.
சுரைக்காய்
என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து.
இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.
யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்.
யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.
பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.
பூசணிக்காய்
என்ன இருக்கு: புரதம், கொழுப்பு
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.
யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது.
பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.
கொத்தவரைக்காய்
என்ன இருக்கு : நார்ச்சத்து
யாருக்கு நல்லது : நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும்படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை, லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும்.
பலன்கள்: ருசி மட்டுமே
வாழைக்காய்
என்ன இருக்கு: கொழுப்புச் சத்து, விட்டமின் இ.
யாருக்கு நல்லது: வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும்.
யாருக்கு வேண்டாம்: வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்: உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும்.
வெள்ளரிக்காய்
என்ன இருக்கு: விட்டமின் ஏ, பொட்டாசியம்
யாருக்கு நல்லது: சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா நோயாளிகளுக்கு.
பலன்கள்: உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.
சுண்டைக்காய்
என்ன இருக்கு: விட்டமின் சி
யாருக்கு நல்லது : சிறுவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு நாள் சாப்பிடலாம்.
பலன்கள்: கிருமிகளை, வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல் திறன் தரும். சளியைக் கரைக்கும்.
பலாக்காய்
என்ன இருக்கு : சுண்ணாம்புச்சத்து
யாருக்கு வேண்டாம் : வாத நோய், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு.
பலன்கள் : செக்ஸ் உணர்வைத் தூண்டும். போதை நச்சுக்களை முறிக்கும். பால்வினை நோய்களை மட்டுப்படுத்தும்.
பப்பாளிக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம்.
யாருக்கு நல்லது : மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க
விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.
யாருக்கு வேண்டாம் : கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.
பலன்கள் :சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.
 பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
 பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
 பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
 நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
 பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
 பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
 பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
 பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
 பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
 பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
 பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
 பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
களாக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, சி.
யாருக்கு நல்லது : மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த
மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : தொண்டைவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : கண் பார்வையைத் தெளிவாக்கும். சாப்பாடு ஏற்கும் திறனை அதிகரித்து, பித்தத்தை கட்டுப்படுத்தும்.
நெல்லிக்காய்
என்ன இருக்கு : விட்டமின் சி, செல்லுலோஸ், கார்போ ஹைட்ரேட், கால்சியம்,
பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் நிகோடினிக் ஆசிட்
யாருக்கு நல்லது : பிளட் பிரஷர், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
எல்லோருக்கும் உகந்த அமிர்தக்கனி.
பலன்கள் : இளமையை நீடிக்கச் செய்யும். தலைமுடி, தோல், கண் பார்வையை
பாதுகாக்கும். இதயம் நுரையீரலை வலுவூட்டும். காரட்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள்.
யாருக்கு நல்லது : அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : கண் பார்வைக்கு உகந்தது. உடல் பருமனாகாமல் காக்கும். காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும்.
பீன்ஸ்
என்ன இருக்கு : புரதம், கார்போ ஹைட்ரேட், விட்டமின் ஏ, தாது உப்புகள்.
யாருக்கு நல்லது : ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
யாருக்கு வேண்டாம் : குடைச்சல், ஏப்பம், வயிற்று வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஜீரணத் தொந்தரவு ஏற்படும்.
பலன்கள் : பித்தம் தணியும், பார்வை தெளிவு, சருமப் பளபளப்புக்கு உதவும். வாயு நீக்கும்.
நூல்கோல்
என்ன இருக்கு : சுண்ணாம்புச் சத்து
யாருக்கு நல்லது : ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு, சர்க்கரை நோயாளிகளுக்கு.
யாருக்கு வேண்டாம் : உப்புச் சத்து அதிகம் உள்ளவர்களுக்கு.
பலன்கள் : ரத்தச் சிவப்பணுக்களை பெருக்கும். ரத்தச் சோகையை நீக்கும்.
முள்ளங்கி (வெள்ளை)
என்ன இருக்கு : நீர்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து.
யாருக்கு நல்லது : சீறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும்.
யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா நோயாளிகளுக்கு.
பலன்கள் : அதிகம் குளிர்ச்சி தரும். வாயுவை வெளியேற்றும்.
முள்ளங்கி (சிவப்பு)
என்ன இருக்கு : கந்தகம், கால்சியம், விட்டமின் சி.
யாருக்கு நல்லது : ஹைபர் அசிடிட்டி உள்ளவர்களுக்கு.
பலன்கள்: கை, கால், மூட்டு வீக்கத்தைக் குறைக்கும். ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவைக் குறைக்கும். மித உஷ்ணம் தரும். சிறுநீரை வெளியேற்றும்.
காலிஃபிளவர்
என்ன இருக்கு : பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், விட்டமின் ஏ, இ.
யாருக்கு நல்லது : புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு. எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
பலன்கள் : மலச்சிக்கலை போக்கும். உடலை இளைக்கச் செய்யும்.
முட்டைக்கோஸ்
என்ன இருக்கு : சோடியம், இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ, இ.
யாருக்கு நல்லது : சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது.
யாருக்கு வேண்டாம் : பனிக்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது. கருப்பையில் திசு வளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். கிரேக்க நாட்டின் அந்தக் கால வயாக்ரா. மலச்சிக்கலை விலக்கிடும். தாது பலம் பெருகும். இளமையை தக்க வைக்கும்.
நார்த்தங்காய்
என்ன இருக்கு : சிட்ரஸ் ஆசிட்
யாருக்கு நல்லது : அஜீரண கோளாறு உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : வயிற்றுப்புண் அல்சர் நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : வாயுத் தொல்லையை விலக்கி நெஞ்சுக் கரிப்பை நீக்கும். அதிகப்படியான அமில சுரப்பை கட்டுப்படுத்தும்

ஆல்ரவுண்டர் திராட்சை:
திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கும், மீதி உணவுக்குமாக இது பயன்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதிலுள்ள ‘குளுக்கோஸ்’ விரைவில் ரத்தத்தை அடைந்து சக்தி தருகிறது. இரத்த உற்பத்தியையும் செய்கிறது. மேலும், மலச்சிக்கல்,ஆஸ்துமா,ஒற்றைத்தலைவலி என பல்முக குண ஊக்கியாய் பணிபுரிகிறது.
மருத்துவமனையாகும் எலுமிச்சை: எவரெஸ்ட் சிகரத்தை முதலில் எட்டிய வீரர்கள் இந்தச் சாற்றைப் பருகியே சாதித்ததாக கூறினர். இதன் முக்கிய சேர்க்கை ‘சிட்ரிக் அமிலமும்’, ‘வைட்டமின் சி’ யும் தான். இரத்த வாந்தியை இது நிறுத்தும். நுரையீரல், குடல், தொண்டை, ஜலதோஷம், காலரா, உடல் பருமன், நல்ல பசி என அனைத்துத் துறைகளிலும் இது பணியாற்றி சிறந்த மருந்தகமாய் திகழ்கிறது.
அத்தி தரும் ஆரோக்கியம்: இந்தப் பழம் இறைமறை குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஹோமரின் காவியம் பேசுகிறது. பைபிளிலும் இதன் வாசம் வீசுகிறது. இதில் விட்டமின் ‘சி’ இரும்புச் சத்து, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து இதிலுண்டு. தேயும் எலும்புக்கு வேண்டிய கால்சியம் இதில் உள்ளது. பத்தே நாளில் வீரியம் தரும் சுவரொட்டிகளுக்கு மத்தியில், இப்பழம் உண்மையிலேயே ஆண்மையைத் தட்டியெழுப்புகிறது. மூலநோய்க்கும், மூளைச் சோர்வுக்கும் இது அருமருந்து. முதுமையிலும் வேகமாக நடந்த காந்திஜி இளமையில் சாப்பிட்டது இதைத்தான்.
ஆரஞ்சும் இன்னொரு தாய்ப்பாலே: தாய்ப்பால் தரமுடியாத தாய்மார்கள் தங்களின் பிரதிநிதியாக குழந்தைகளுக்கு இந்தச் சாறைத் தரலாம். இப்பழம், இதயவலி, மார்புவலிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். இரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்தத்தைக் கொண்டு செல்ல இது உதவுகிறது. ஒரு ஆரஞ்சுப் பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது. நல்ல தூக்கத்தை இது வரவழைக்கிறது. தினமும் இதைச் சாப்பிட நீண்ட ஆயுள் உறுதியாகும்.
வயிற்றைப் பேனும் மாதுளை: பாபிலோனியாவின் தொங்கும் தோட்டத்தில் மாதுளை இருந்திருக்கிறது. இது மஞ்சள் காமாலையைப் போக்கி, கல்லீரல், இதயம், சிறுநீரகம் இவைகளையும் பாதுகாக்கிறது. பித்த வாந்தி உள்ளோர் இதைத் தேனுடன் சாப்பிட உடனடி நிவாரணம் உண்டு. மலத்துடன் ரத்தம் வெளியேறுவதை இது தடுக்கிறது. அறிவுத்திறனை அதிகரிக்கும் பழமாகவும் இது முதலிடம் பெறுகிறது.

ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள். மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை.
ஆப்பிள் பழம் எல்லாத் தரப்பு மக்களாலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான விருந்துகளிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் உணவாகப் பயன்படுகிறது. மருத்துவத்தில் இதன் உபயோகம் அதிகரித்துள்ளது. ஆப்பிள் பழம் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஆப்பிள் எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கிறது. எல்லா ஊர்களிலும் வாங்க முடிகிறது.

ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன. ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயனக் கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாகச் செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்புசத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.
தேவையற்ற கொழுப்புச் சத்து குறைக்கப்பட்டு HDL அதிகரிக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. அதிக இரத்தப் போக்கைத் தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது. சோடியம் உடம்புக்குப் பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.
ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள். சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது. குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு இன்ஷா அல்லாஹ் குணமாகும். வலிப்பு நோய் உள்ளவர்கள ஆப்பிள் பழச்சாறு 60 மி.லி, அத்திப் பழச்சாறு 60 மி.லி கலந்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வந்தால் மூன்று தினங்களில் வலிப்பின் தீவிரம் இன்ஷா அல்லாஹ் குறைந்துவிடும்.

மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிடும் பலக்கத்தைக் கொண்டுள்ளதால் தேவையான சக்தியைப் பெறுகிறார்கள். இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் மட்டும் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.
தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்புடையவர்கள் குணமடைய, இரவில் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தண்ணீரில் போட்டு வைத்திருந்து அதிகாலையில் இதன் சாற்றைப் பிழிந்து கொடுத்துவந்தால் தூக்கத்தில் எழுந்து நடக்கும் ஆபத்தான நிலையில் இருந்து, ஆச்சரியப்படும்படியான நிவாரணத்தைப் இன்ஷா அல்லாஹ் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும். சரியான உடல் வளர்ச்சியும், சதைப் பிடிப்பும் இல்லாதவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப் பருமன் அடைவார்கள்.

குடற் கிருமிகள் வெளியேற ஆப்பிள் பழத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் குடற் கிருமிகள் இன்ஷா அல்லாஹ் அழிந்துவிடும்.
திருமண வயதை எட்டிய நிலையில் உள்ள ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இந்திரியச் சுரப்பு கூடும்.
உடம்பில் சிலருக்கு கெட்டவாடை வரும்; வியர்வை நாற்றம் அடிக்கும். இப்படி உள்ளவர்கள் விலை உயர்ந்த வாசனையுள்ள செண்ட்டுகளையும், பவுடர்களையும் பயன்படுத்துவார்கள். இவர்களின் இரத்தம் சுத்தியடையவும், கெட்ட வாடைகள் இல்லாமல் இருக்கவும், தினசரி இரண்டு ஆப்பிள் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும். உடலில் நல்ல மணம் இயற்கையாக உண்டாகும்.

ஆப்பிள் பழச்சாற்றைத் தேவைக்கு ஏற்ப தயாரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் பாகு பதம் வரும். இந்தப் பாகை எடுத்து வைத்துக்கொண்டு காலை, மாலை, இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வந்து, வயதுக்கு ஏற்ற அளவில் செயல்படும். இதய நோயாளிகளும், மூளையின் போஷாக்கு தேவைப்படுபவர்களும் இம்முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல பலனைக் கொடுக்கும். குதிகால் வாதம் உள்ளவர்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் குதிகால் வாதம் இன்ஷா அல்லாஹ் படிப்படியாகக் குறைந்து குணமாகும்.

சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து இன்ஷா அல்லாஹ் பூரண குணம் ஏற்படும். தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து இட்லி வேகவைப்பதுபோல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேன் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூளைக்கு சக்தியளிக்கும். மூளையில் சோர்வு இருக்காது. பல், ஈறுகள் கெட்டிப்படும். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். உடம்புக்குத் தேவையான முழு போஷாக்கையும் கொடுக்கும்.

ஆப்பிள் ஜூஸ் :
ஆப்பிள் பழம் ஒன்றைத் துண்டித்து எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட் 500 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும். பனங்கற்கண்டும் தேவையான அளவில் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து மிக்சியில் அடித்து தினசரி சாப்பிட்டுவந்தால் இயற்கையான தாதுபலத்தைத் தரும். இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல தடுக்கும். குறிப்பாக குடற்புற்று, ஆசனப்புற்றைத் தடுப்பதில் முக்கியமானது. உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. இளமை நீடிக்க உதவுகிறது.
ஆப்பிள் மரப்பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். இதை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இப்பூக்களை வாங்கி சுத்தம் செய்து, இதற்குச் சமமாய்ச் சர்க்கரைச் சேர்த்து நன்கு கலவை செய்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைத்து துணியால் வேடுகட்டி ஒரு மண்டலம் வெய்யிலில் வைத்து எடுத்துக் கொண்டு தினசரி 10 கிராம் அளவில் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் கோளாறுகள் நீங்கி ஆண் தன்மை அதிகரிக்கும். இதயம் பலப்படும். மூளைக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.
மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு.
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள்
உள்ளன.

இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும்
பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை
அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம் முத்துக்களில் சிறிதளவு …. மிளகுப் பொடியும் சேர்த்துச் சாப்பிட்டால் அனைத்து வகையான பித்தரோகமும் இனஷா அல்லாஹ் தீரும்.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.
மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி இனஷா அல்லாஹ் நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும்.
பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரைமணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒரு கிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்துக் கொண்டு மீண்டும் பாகுபதம் வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்தநோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரிய விருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும்.

பொதுவாக மாதுளம்பழச்சாற்றுக்கு நான்கில் ஒரு பாகம் சீனி கலந்து சாப்பிட்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும்
சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும்
உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்று விடும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கிற்கு இதே மருந்தை மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து காலை, மாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் இனஷா அல்லாஹ் தீரும்.
மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும்.
மலராத மாதுளம் மொட்டுக்களைக் காய வைத்து பொடித்துக் கொண்டு இதில் சிறிதளவு ஏலம், கசகசாவையும் பொடித்துக் கலந்து 10 கிராம் அளவில் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீத பேதியும் இனஷா அல்லாஹ் குணமாகும். உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். கொப்பளிப்பது தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு இனஷா அல்லாஹ் நிவர்த்தியாகும்.
மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை இனஷா அல்லாஹ் நீங்கும். அலர்ஜியை நிவர்த்திக்கும் மூலச்சூடும் வெட்டை நோயும் நீர்க்கடுப்பும் இனஷா அல்லாஹ் நிவர்த்தியாகும்.
மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப்பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து விடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் இனஷா அல்லாஹ் தீரும்.
மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம்.
புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2_5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் இனஷா அல்லாஹ் குணமாகும்.
துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும். மாதுளம் மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும் ‘பற்கள் கெட்டிப்படும். ஈறுகளின் நோய் தீரும். பற்களின் வலி குறையும். மாதுளை ஒரு பல்முனை நிவாரணியாகப் பயன்படுகிறது.

இஞ்சி
என்ன இருக்கு : கால்சியம், கார்போ ஹைட்ரேட், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட், விட்டமின் ஏ.
யாருக்கு நல்லது : எல்லோருக்கும். அஜீரணக் கோளாறு, மூச்சுத் தொல்லை, மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிக நல்லது.
யாருக்கு வேண்டாம் : வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு.
பலன்கள் : வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் ஏற்படும் போது இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் தேனில் கலந்து குறிப்பிட்ட அளவிற்கு சாப்பிட்டு வந்தால் வாந்தி, மயக்கம் இன்ஷா அல்லாஹ் போயே போய்விடும். இஞ்சி மட்டுமல்ல. அது காய்ந்து சுக்காக மாறினாலும் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாகச் செயலாற்றுகிறது. பித்தத்தை தணிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். ஆயுளை நீடிக்கச் செய்யும். கொழுப்பைக் கரைக்கும். பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் ஏதுமின்றி இஞ்சி மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் அனைவருக்கும் பயன்படுகின்றன.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே.

பூண்டு
பூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
பலன்கள் : பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். மூட்டு வலியைப் போக்கும். வாயுப் பிடிப்பை நீக்கும்.
ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62.0 விழுக்காடும், புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நாச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லிகிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.

யாருக்கு நல்லது : பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். பால்+பூண்டு+தேன் கலவையை தினமும் பருகி வர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது.
காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.
பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள்

சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.
பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.
நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.
நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இன்ஷா அல்லாஹ் இல்லற வாழ்வு இனிதாகும்.

வெங்காய வைத்தியம்

1) நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.
2) சம அளவு வெங்காயச் சாறையும், வளர் பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து காதில் விட, காது வலி குறையும்.
3) வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.
4) வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத் தூளையும் இவற்றைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட, எல்லாவிதமான மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5) வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட, உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
6) வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும்.
7) வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க, இருமல் குறையும்.
8.) வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர, பல்வலி, ஈறுவலி குறையும்.
9) வெங்காயப்பூ, வெங்காயத்தைச் சமைத்து உண்ண, உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு குறையும்.
10) வெங்காயத்தை அவித்து, அதோடு தேன், கற்கண்டை சேர்த்துச் சாப்பிட, உடல் பலம் ஏறும்.
11) வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
12) வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
13) படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றைப் பூசிவர மறைந்துவிடும்.
14) திடீரென மூர்ச்சையானால், வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், மூர்ச்சை தெளியும்.
15) வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால், சீதபேதி நிற்கும்.
16) வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க, நன்கு தூக்கம் வரும்.
17) பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சூடுபடுத்தி குடித்துவர, மேக நோய் நீங்கும்.
18) வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட, மேகநோய் குறையும்.
19) வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து கொண்டது. எனவே, குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20) பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21) வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்திற்கும் உதவுகிறது.

பூண்டு வைத்தியம்



இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.'' - பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல இது. நல்லது கெட்டதுகளின் அனுபவ சாட்சியாய் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் 'அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் எழுதி இருக்கும் குறிப்பு இது. 'பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தன் உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும் உடலுக்கு உற்ற துணை புரியும் பூண்டு, மருத்துவ உலகின் வரப்பிரசாதம். சைவம், அசைவம் என எல்லா வகை உணவிலும் பூண்டு தவிர்க்க முடியாதது.
 

பூண்டின் மகத்துவத்தைப் பற்றியும், நோய்களைக் குணப்படுத்த அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விவரிக்கிறார் காரைக்குடி சித்த மருத்துவ மைய சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம். ''பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது.

இருமல், மூச்சுத்திணறல், மலக் கிருமிகளினால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்னைகள் உள்ள 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெள்ளைப் பூண்டினை அரைத்து மிகவும் சிறிது அவர்களது நாக்கில் தடவினாலே போதும். நிவாரணம் கிடைக்கும். தலையில் பூச்சிவெட்டு ஏற்பட்டுக் கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைத்து, மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, பூச்சிவெட்டு உள்ள இடத்தில தடவிவர வேண்டும்.

5 பூண்டுப் பற்கள் எடுத்துத் தோல்நீக்கி 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்கவேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டைக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்புவலி, மூச்சு அடைப்பு சரியாகும். பூண்டுக் கஞ்சி சாப்பிடுவது கிராமத்து வழக்கம். தேவையான அளவு பூண்டினை எடுத்துத் தோல்நீக்கி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை முறையே 50 கிராம் சேர்த்து அரைத்து, தூள் செய்து, அரை லிட்டர் பசும்பால் விட்டு வேகவைத்து, வற்றும் சமயத்தில் அதில் பனங்கற்கண்டைச் சேர்க்க வேண்டும். மாதம் இருமுறை பூண்டுக் கஞ்சி சாப்பிட்டால் ரத்தசோகை மாறி உடல் வலிமை பெறும்.

பூண்டுக் கஞ்சியுடன் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் வீரியக்குறைவு சரியாகும். மேலும் மலச்சிக்கல், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவையும் சரியாகும். 10 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 3 பூண்டுப் பற்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 5 பூண்டுப் பற்களும் பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்குப் பூண்டு நல்ல பலன் தரும். பூண்டுப் பல் 5 எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அரைத்துத் தூள் செய்து, பால் கலந்து உண்டுவர ரத்த ஓட்டம் சரியாகும். வாதநோய்கள் (பக்கவாதம், மூட்டுவாதம், சுண்டுவாதம், நடுக்குவாதம், ஒருபக்க வாதம்) குணப்படுத்தவும் பூண்டு சிறந்த மருந்து.

விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், புங்க எண்ணெய், புன்னை எண்ணெய் (புன்னை மர எண்ணெய்), இலுப்பெண்ணெய் ஆகியவற்றை 100 மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து அத்துடன் தேவையான அளவு தழுதாளை இலை, நொச்சி இலை ஆகியவற்றைப் பூண்டின் சாறுவிட்டு அரைத்து, அதையும் எண்ணெயில் கலக்க வேண்டும். எண்ணெயை நன்கு கொதிக்க வைத்து ஆறவிட்டு வாதம் உள்ள இடத்தில் தடவி வர மேற்கூறிய வாதங்கள் சரியாகும்.

மூலிகை வைத்தியம் என்றென்றும்


அகத்தி - வலி, கபம், சோகை, குன்மம்

அதிமதுரம் - பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி

அரளி - அரிப்பு, கண் நோய், கிருமி

அருகம்புல் - கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்

ஆடாதோடை - இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி

ஆவாரை - நீரிழிவு, ரத்த பித்தம்

இஞ்சி - அஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறு உப்புசம்

எலுமிச்சை - பிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்

ஓமம் - கண்நோய், கபம், விக்கல்

கடுக்காய் - இருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக் காய்ச்சல், இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு

கண்டங்கத்திரி - இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்ட சளி

கரிசலாங்கண்ணி - பகம், வாதம், கிருமி நோய், இருமல், கண்நோய், தலைவலி

கருவேப்பிலை - இரத்த பித்தம்

கருவேலம் - பல்வலி, இரத்த தோஷம், கபம், அரிப்பு, கிருமி நோய், விரணம்

கீழாநெல்லி - காமாலை, பித்தம், இருமல்

குங்குலியம் - பாண்டு நோய், காதுவலி

கொடிவேலி - கிரஹணி, வீக்கம்

கொத்தமல்லி - காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு

சதகுப்பை - இருமல், யோனி நோய்கள்

சீரகம் - வயிறு உப்புசம், காய்ச்சல்,வாந்தி

தும்பை - நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல், நாவறட்சி, இரத்த தோஷம்

திப்பிலி - இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை

தும்பை - கபம், அஜீரணம், வீக்கம்

நன்னாரி - ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்

நாயுருவி - கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி

நாவல் - பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்

நிலவாரை - கபம், பித்தம், நீரழிவு

பூசணி - புத்தம், ரத்த தோஷம், மனநோய்

பூண்டு - இதய நோய், இருமல்

பூவரசு - நஞ்சு, நீரழிவு, விரணம்

பெருங்காயம் - வயிற்றுவலி, உப்புசம்

பேரீச்சை - கஷயம், வாதம், வாந்தி, காய்ச்சல்

நாவறட்சி – மணத்தக்காளி, இருமல், ரத்த தோஷம், அஜீரணம், பித்தம்

மிளகு - வயிற்று உப்புசம், பல்வலி

முள்ளங்கி - காய்ச்சல், இழுப்பு , கண் மூக்கு, தொண்டை நோய்கள்

வசம்பு - மலபந்தம், வயிறுஉப்புசம், கைகால் வலி, நீர்பெருக்கு, கிருமி நோய்

வல்லாரை - சோகை, நீரழிவு, வீக்கம்

வாகை - வீக்கம், அக்கி, இருமல்

வால்மிளகு - வாய்நாற்றம், இதய நோய், பார்வைக்குறைவு

வெற்றிலை - கபம், வாய்நாற்றம், சோர்வு

ஜாதிக்காய் - சுவையின்மை, இருமல்

ஆரோக்கியம் உணவின் வழியாக

 சீரான உணவு, முறையான உடற்பயிற்சி இவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்தை எப்போதும் நன்முறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உடல் ஆரோக்கியத்தில் உணவின் பங்கு மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பெரும்பான்மையான உடல் நலக்கேடுகள் முறையற்ற உணவினால்தான் தோன்றுகின்றன. எண்ணெய் வகை உணவுகளுமே காரணம். பொரியல், வதக்கல் என எல்லாமே எண்ணெய் வகை உணவுகளை உண்ண கூடாது. இது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.

வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்: இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக் கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு: கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்: கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்: போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

முருங்கைக் காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

சுண்டைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

சுரைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குடைமிளகாய்: வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

அவரைக்காய்: புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்: உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்: இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கத்தரி பிஞ்சு: கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

Tuesday, April 15, 2014

பல்வேறு மருத்துவக் குறிப்புகள்

 துளசிச்சாறு 5 மி.லி. + வெங்காயச் சாறு 5 மி.லி.+ தேன் 10 மி.லி. தினமும் 2 வேளை குடிக்கவும். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.

நாட்பட்ட இருமலுக்கு பூண்டை (2 பல்) நசுக்கி, ஒரு டம்ளர் பாலிலிட்டு காய்ச்சவும். பாதியாக சுண்டியதும், வடிகட்டி சர்க்கரை சேர்த்து தினமும் 2 வேளை குடிக்கவும். அதிக அமில சுரப்பினால் அவதிப்படுபவர்கள் இந்த பூண்டு கஷாயத்தை தவிர்க்கவும்.

வெறும் தேனைக் குடித்தாலே சிலருக்கு இருமல் விலகும்.

கடுக்காயை நசுக்கி, முழுங்காமல் வாயில் வைத்து மென்றால், அதன் சாறுகள் உள்ளிறங்கி, இருமலை நிறுத்தும்.

வெற்றிலை சாறு, கற்பூரவல்லி சாறு இவற்றுடன் தேன் கலந்து இரண்டு (அ) மூன்று வேளை கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு வசம்பை அரைத்து தேனுடன் கொடுக்கலாம்.

சுக்கு, திப்பிலி, மிளகு, பனங்கற்கண்டு இவற்றால் செய்த கஷாயம் இருமலை போக்கும்.

கொதிக்கும் நீரில் மஞ்சள் பொடி போட்டு ஆவி பிடிக்கலாம்.

கொத்தமல்லி விதை (தனியா) யை கஷாயம் வைத்து குடித்தால் இருமல் விலகும்




 தொண்டைப்புண்

தொண்டைப்புண்களுக்கு தேன் நல்லது. தேனை வாயில் சிறிது நேரம் வைத்திருந்தால் தொண்டையில் பரவும். தொண்டையின் அழற்ச்சியை தணிக்கும். மஞ்சளும் நல்ல வீட்டு மருந்து. அரை தேக்கரண்டி மஞ்சள் பொடியை ஒரு கப் சூடான பாலில் இட்டு, சர்க்கரை சேர்த்து, தினமும் இரு வேளை பருகவும்.

அதிக அமில சுரப்பு (Acidity)

நான்கைந்து மிளகை, நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
இந்தப் பொடியை சிறிது சர்க்கரை கலந்து பாலில் சேர்த்து, தினமும் சாயங்காலம், 15 நாட்களுக்கு குடித்து வரவும்.
இளநீர் குடிக்கலாம். இளநீர் வழுக்கை (இளம் தேங்காய்) யை எடுத்துக் கொண்டால் இன்னும் நல்லது.
படுக்கும் முன் குளிர்ந்த பாலை குடிக்கலாம்.

இருமல்

எட்டு பாதாம் பருப்புகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் பாதாமின் தோல்களை அகற்றி விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன் 20 கிராம் வெண்ணெய், சர்க்கரை சேர்க்கவும். காலையிலும், மாலையிலும் இரு வேளை இந்த விழுதை சாப்பிட்டு வர இருமல் குறையும். அதுவும் உலர்ந்த இருமலுக்கு இந்த விழுது நல்ல பலன் தரும்.

நல்ல மஞ்சள் பொடி 2 கிராம் எடுத்து சூடான பாலில் (1 கப்) கரைத்து தினமும் இரு வேளைகளில், 15 நாள் குடித்து வரவும்.

துளசி சாறு 5 மி.லி. எடுத்து 10 மி.லி. தேனில் கலந்து சாப்பிடவும். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல் ஏற்படுகின்ற வாய்ப்புள்ளவர்கள், படுக்கைக்குச் செல்லுமுன் கனத்த உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பதுடன், இரவு உணவிற்கும், படுக்கைக்குச் செல்வதற்கும் இடையே குறைந்தது மூன்று மணி நேரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அஜீரணம்

அஜீரணம், அதுவும் ஜுரத்துடன் கூடிய பித்த அஜீரணத்திற்கு கடூக்கி எனும் கடுகு ரோகினி நல்ல மருந்து ஆகும்.

கடுகு ரோகினி ஜுரத்தை குறைக்கும், வயிற்றுப் பூச்சிகளை அகற்றும், இதமான மலமிளக்கி வயிற்று வலியை போக்கும்.





 கபம், சளி இல்லாத வறட்டு இருமலுக்கு, தொண்டையை முதலில் வழவழப்பாக செய்ய வேண்டும். இதற்கு ஆயுர்வேத பண்டிதர்கள் பசும் பால் மற்றும் பசு நெய்யை உபயோகிப்பதை சிபாரிசு செய்கிறார்கள்.

அதிமதுர வேர் கஷாயம் தயார் செய்து தேனுடன் குடிக்க இருமல் குறையும்.

கருமிளகு 250 லிருந்து 750 மி.கி. எடுத்து நெய், சர்க்கரை, தேனுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

துரித நிவாரணத்திற்கு கறுப்பு, உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம், கரு மிளகு, வாயு விளங்கம், வால் மிளகு, தேன் இவற்றில் சம அளவு எடுத்து குழைத்து சாப்பிடலாம்.

மஞ்சள் பொடி கலந்து சூடான பால் தொண்டைக்கு இதமானது. மஞ்சள் ஒரு கிருமி நாசினி. இந்த மஞ்சள் பொடி கலந்த பாலை 15 நாளாவது குடிக்க வேண்டும்.

துளசி சாறு 5 மி.லி. எடுத்து, 10 மி.லி. தேனில் கலந்து தினம் இரு வேளை குடித்து வந்தால் இருமல் நிற்கும். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.

ஒரு டம்ளர் பாலில் இரண்டு பூண்டு 'பல்' களை நசுக்கிப் போட்டு காய்ச்சவும். பாலின் அளவு பாதியாகும் வரை காய்ச்சவும். வடிகட்டி, இரண்டு பாகங்களாக பிரித்து, ஒரு பாகத்தை காலையிலும், மற்றொரு பாகத்தை மாலையிலும், 1 வாரம் குடிக்கவும். அதிக அமில பாதிப்பு உள்ளவர்கள் இதை தவிர்க்கவும்.

வெங்காயச் சாறு (5 மி.லி.) + தேன் (10 மி.லி.) கலந்து 10 நாட்களுக்கு காலை, மாலை இரு வேளை எடுத்துக் கொள்ளவும். தேனுக்கு பதில் வெல்லத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

"ஆவி பிடித்தல்" சளிக்கு மட்டுமல்ல, இருமலுக்கும் நல்லது. ஆவி பிடிக்கும் நீரில் மஞ்சள் பொடி சேர்த்தால் இன்னும் நல்லது. கிராம்பு தைலம் அல்லது யூகலிப்டஸ் எண்ணெய்யையும் ஆவி பிடிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளலாம்.
கற்பூர வல்லி சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும். கற்பூர வல்லி மற்றும் இதர ஆயுர்வேத மூலிகைகள் தனியே விவரிக்கப்படுகின்றன.

இதர குறிப்புகள்

இரவில் இருமல் தொல்லை (அதுவும் வறண்ட இருமல்) அதிகமாகும். இன்னொரு தலையணை வைத்து, தலையை தூக்கி படுத்துக் கொள்ளவும்.

நிறைய நீர் (சிறிது சூடான) அல்லது திரவ உணவுகளை (8 (அ) 10 டம்ளர்) குடிக்கவும்.

புகைப்பதை உடனே நிறுத்தவும்.




தேவையானவை
கானம் பயறு (கொள்ளு) - 50 கிராம்
நல்ல மிளகு- 3 தேக்கரண்டி
வெள்ளைப் புண்டு - 8 பல்
சுக்கு - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
கொள்ளுவை வாணலியில் போடடு சிறு தீயில் பொன்னிறமாக வறுக்கவும்
பின் வறுத்த கொள்ளுவை அம்மியில் (மிக்சி) போட்டு பொடி செய்து கொள்ளவும்
இதனுடன் நல்ல மிளகு, புண்டு மற்றும் சுக்கு இவற்றையும் பொடி செய்து கொள்ளவும்
பின் அடுப்பில் வாணலியை வைத்து இவற்றை அதில் போடடு தேவையான அளவு தண்ணீர் (2 டம்ளர்) சேர்த்து
தேவையான அளவு உப்பு சோ்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

பின் இம்மருந்தை சற்று சுடாக குடிக்கவும். இரண்டு நாள் தொடர்ந்து குடித்தால் வறட்டு இருமல் என்ன எந்த இருமலும் காணாமல் போய்விடும். செய்து பாருங்கள்




‘‘துளசி, தூதுவளை, கற்பூரவல்லி இவற்றை அலம்பி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேன் கலந்து குடித்தால் உடம்பு வலி, சளி, இருமல் எல்லாம் போயே போய்விடும். உடம்பிற்கு ஒரு புத்துணர்ச்சி வந்ததுபோல இருக்கும்’’ வாரம் ஒரு முறை இதைக் குடித்தால் இருமல், சளி நம்மை அண்டவே அன்டாது.


இரவு படுக்கப்போகும் முன் ஒரு தம்ளர் சூடான பாலில் சிறிது மஞ்சள் பொடி, சிறிது மிளகுப் பொடி போட்டுக் குடிக்கலாம் என்ற குறிப்பின் படி செய்ய ஆரம்பித்தேன். வறட்டு இருமல் போயே போச்!

ஒரு தம்ளர் நீரைக் கொதிக்க வைத்து அதில் ஒரு மேசைக்கரண்டி தேன் கலந்து ½ மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து சாப்பிடுங்கள். ஜலதோஷம்? இட்ஸ் கான்!


செய்முறை: ½ அங்குலத் துண்டு இஞ்சியை சின்னச்சின்ன துண்டுகளாக நறுக்கி ஒரு தம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும். இந்தத் தண்ணீரை வடிகட்டி ஒரு மேசைக்கரண்டி தேன் விட்டு நன்றாகக் கலக்கிக் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை சாப்பிடவும். ஜலதோஷம்? போயே போச்!

பட்டை, மிளகு மற்றும் தேன் இவை நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தவை. இவை எப்போதும் உங்கள் சமையலறையில் இருக்கட்டும். ஒரு தம்ளர் நீரில் சில பட்டை துண்டுகள் போட்டுக் கொதிக்க விடவும்.இதனுடன் 2 தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை மிளகுத்தூள் போட்டுக் குடிப்பதும் ஜலதோஷத்திற்கு நல்லது.

தலைவலிக்கு:

எலுமிச்சம் பழ சாறு கலந்த கருப்பு டீ மிக நல்லது.  இது மூளையின் நரம்புகளைத் தளர்த்தி தலைவலியை குறைக்கிறது. ஒரு கப் தேநீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். தலைவலி………… gone!

வறட்டு இருமலுக்கு:

உலர்ந்த திராட்சை சாறு தொண்டையில் ஏற்படும் தொற்றுக்கு உடனடி நிவாரணம் கொடுக்கும்.

50 கிராம் உலர்ந்த திராட்சையைத்  தண்ணீர் விட்டு அரைக்கவும். அத்துடன் 50 கிராம் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கெட்டியாக (சாஸ் போல) ஆகும் வரை கொதிக்க விடவும். தினமும் ஒரு மேசைக்கரண்டி அளவு சாப்பிட்டு வரலாம்.

அஜீரணம், வாயுத்தொல்லை இவற்றிற்கு வெள்ளைப் பூண்டு சேர்த்த பால் நல்ல நிவாரணம் கொடுக்கும்.

செய்முறை: 2 பூண்டுப் பற்கள் எடுத்து நன்றாக தட்டி சற்று சூடான பாலில் கலந்து குடிக்கவும்.

இன்னொரு வீட்டு வைத்தியம் அஜீரணத்திற்கு:

சோம்பை  நன்கு வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். இரவு படுக்கப் போகும் முன் ஒரு தம்ளர் கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டியளவு சோம்புப் பொடியைப் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் இந்த நீரை வடிகட்டிவிட்டு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிடவும்.

இன்னொரு முறை: இஞ்சி, சீரகம், சோம்பு, மிளகு இவற்றை பொடி செய்து கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை கொதி நீரில் போட்டு வடிகட்டி தேன் விட்டு சாப்பிட அஜீரணம் மறையும்.

அசிடிடி குறைய ஷாஜீரா உதவும். இந்த விதைகளில் இருக்கும் எண்ணையில் ஜீரணத்தைத் தூண்டும் முக்கியமான பொருட்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்ட் (anti-oxident) பொருட்களும் உள்ளன. இவை ஜீரணத்தை அதிகரித்து வாயு சேர்வதையும் அசிடிடியையும் குறைக்கிறது.

ஒரு தம்ளர் நீரில் ஷாஜீரா ½ தேக்கரண்டி சேர்த்துக் கொதிக்க விடவும். சிறிய தீயில் 10 நிமிடங்கள் வைக்கவும். தினமும் 2, 3 முறை சற்று சுட வைத்துப் பருகவும்.

மாத விலக்கு சமயத்தில் வரும் வயிற்று வலிக்கு:

இஞ்சியை நன்கு அலம்பி தோல் சீவிவிட்டு தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும். இதனுடன் சிறிது வெல்லம் சேர்க்கவும். ஒரு பத்து நிமிடங்கள் கொதித்த பின் அடுப்பை அணைக்கவும். சற்று சூட இருக்கும்போது ஒரு தேக்கரண்டி அல்லது இரண்டு தேக்கரண்டியளவு அளவு சாப்பிடவும். உடனடி நிவாரணி இது.


அசிடிட்டி நோய்க்கு அரிசி:

    பச்சை அரிசி 8 அல்லது 10 மணிகளை எடுத்துக் கொண்டு தினமும் காலையில் காலை சிற்றுண்டி சாப்பிடுவதற்கு முன் நீருடன் விழுங்கவும்.
    21 நாளைக்கு விடாமல் தொடர்ந்து செய்ய மூன்று மாதத்தில் அசிடிட்டி உங்களை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடும்.
    இந்த சிகிச்சை முறையால் உடலில் இருக்கும் ஆசிட் அளவு நாளடைவில் குறைந்து விடும்.

கொலஸ்ட்ரால் குறைய கொட்டைப்பாக்கு

உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இவற்றுடன் கூட வரும் கொலஸ்ட்ரால் குறைய இதோ ஒரு வீட்டு வைத்தியம்:

    வாசனை சேர்க்காத கொட்டைப் பாக்கை சிறு சிறு துண்டுகளாக்கி ஒவ்வொரு சாப்பாட்டிற்கு பிறகு 20-40 நிமிடங்கள் வாயில் போட்டு மெல்லவும்.
    கடிக்க வேண்டாம்; நன்றாக மென்றவுடன் பாக்கை வெளியே துப்பி விடுங்கள்.
    பாக்கிலிருந்து வரும் ஜூஸ் உமிழ் நீருடன் கலந்து இரத்தத்தின் கொழுப்பை குறைக்கிறது.  இரத்த ஓட்டம் சீராகிறது; இரத்த அழுத்தமும் குறைகிறது.

உயர் இரத்த அழுத்தத்திற்கு மெந்தியம்:

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க மெந்தியம் மிகச் சிறந்த மருந்தாகக் கருதப் படுகிறது.

    8-10 மெந்திய மணிகளை எடுத்துக் கொள்ளவும்;
    தினமும் காலையில் சிற்றுண்டிக்கு முன் தண்ணீருடன் விழுங்கவும்.

சர்க்கரை நோய்க்கு 2 வைத்திய முறைகள்:

முதல் முறை: black tea எனப்படும் பால் கலக்காத தேனீர்

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு முதலில் பாதிக்கப் படும் உறுப்பு சிறுநீரகம் தான். இவர்கள் தினமும் காலையில் கறுப்பு தேனீர் குடிக்கலாம்.

    தேயிலைகளை தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும்.
    பாலோ, சர்க்கரையோ, எலுமிச்சம் சாரோ சேர்க்காமல் குடிக்கவும்.
    சிறுநீரகத்தின் செயல் பாட்டை சரி செய்யும் சக்தி இந்தக் கறுப்பு தேனிருக்கு உண்டு.

இரண்டாவது சிகிச்சை:

    இளம் வெண்டைக்காயை காம்பை நீக்கி விட்டு நீள வாக்கில் அரிந்து கொள்ளவும்.
    இரவு தண்ணீரில் ஊறப் போடவும்.
    காலை சிற்றுண்டிக்கு முன் வெண்டைக்காய் ஊறிய தண்ணீரை குடித்து விடவும்.  வெண்டைக்காய் ஊறியதால் தண்ணீர் சிறிது கொழ கொழப்பாக இருக்கும். இந்தக் கொழ கொழுப்பு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வரும்.
    ஊறிய வெண்டைக்காயையும் அப்படியே சாப்பிட்டு விடலாம்.

பொதுவான சில வீட்டு வைத்தியங்கள்:

    நடு இரவில் சில சமயம் வாயுத் தொல்லையினால் வயிற்று வலி வரும். சூடான நீர் சாப்பிடுவது வாயுவை வெளியேற்றுவதுடன், வலியையும் குறைக்கும்.
    ஜலதோஷம் பிடிக்கும் அறிகுறிகள் தோன்றுகிறதா? தண்ணீரில் ஒரு ஸ்பூன் மிளகு போட்டு கொதிக்க வைத்துக் அவ்வப்போது குடித்து வர ஜலதோஷம் உங்களைப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

இந்தக் குறிப்புகளின் பலன்கள் மருத்துவ ஆராய்ச்சி மூலம் நிருபிக்கப் படவில்லை என்றாலும், இவை எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை என்பது நிஜத்திலும் நிஜம்.



அருமருந்தான அருகம் புல்....
இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டி செய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும்.

பல் ஈறு நோய்களுக்கு.....
எலுமிச்சம் பழச்சாறு அரை பாகம், தக்காளிப் பழச்சாறு ஒரு பாகம். சுத்தமான தேன் கால் பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகவும், பலம் பெறவும் உதவும். நல்ல காபிப்பொடியில் தயாரிக்கப்பட்ட காபியில் குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு உடனே சாப்பிட்டு விடவேண்டும். இவ்வாறு மூன்று தினங்கள் செய்தால் தீராத தலை வலி நீங்கும். பல் ஈறுகளில் ஏற்படும் பல் வலிக்கும் ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும் எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளுக்கு சாப்பிட்டும், பல், ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால் மேற்கண்ட நோய்கள் தீரும்.
எலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் சுத்தமான தண்ணீ­ர் சமஅளவு கலந்து 60 மில்லியளவில் நான்கு மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு உடனே நீங்கும். எலுமிச்சம்பழச் சாறு 1 லிட்டருக்கு 1.5 கிலோ சீனி சேர்த்து சர்பத் தயாரித்து தினமும் 15 மில்லிக்குக் குறையாமல் சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும். நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சைப் பழத்தில் துளையிட்டு, விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.
கருத்தரிக்க உதவும்...
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50லிருந்து 100 கிராம் வரை எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
உதடு வெடிப்புக்கு...  
 
சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.
இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.
வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

கட்டி கரைய....
கடுக்காய், சிவப்பு சந்தனம் ரெண்டயும் தண்ணி விட்டு அரைச்சு குழம்பு போல ஆக்கி கட்டிமேல பூசிக்கிட்டு வா.. கட்டி தானாக் கரைஞ்சிடும்.


தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும். குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்­ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும். குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும். அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்.


குங்குமப் பூவில் போலி நிறைய உண்டு. தேங்காய் துருவலில் வண்ணச்சாயத்தை ஏற்றி, காய வைத்து சிறிது 'saffron' essence கலந்து விற்கிறார்கள். அவை மலிவாக கிடைக்கும். தரமான குங்குமப்பூ ஒரு கிராம் விலை சுமார் ரூ. 500 இருக்கும். உண்மையான குங்குமப்பூவைத் தேர்வு செய்து வாங்கிப் பயனடையுங்கள்!
நோய் எதிர்ப்பு சக்திக்கு......
கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் 'ஏ' அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், இந்த கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.
முதுமை தோற்றத்தைக் கட்டுப்படுத்தும். கண்பார்வை கூர்மையடையும். பல் நோய்கள் வராமல் தடுக்கும். கீரையுடன் பருப்பு மட்டும் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. பல கொடிய வியாதிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங்கண்ணிக் கீரையாகும்.
உடற்சூட்டுக்கு.........
வெந்தயம் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனால் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ உடற் சூடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். மோரில் வெந்தயத்தை போட்டு 10 நிமிடம் விட்டு சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணிந்து விடும். ஒவ்வொரு நாளும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தூளாக்கியோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள சர்க்கரையினளவு கட்டுப்படுத்தப்படும்.
குறிப்பாக நீரிழிவு நோயுள்ளவர்கள் வெறும் வயிற்றில் இந்த வெந்தயத்தை தண்ணீ­ரில் ஊறவைத்து காலையில் பருகி வர நல்ல மாற்றம் கிட்டும். பொதுவாக பாலூட்டும் தாய்மாருக்கு பால் நன்றாக சுரக்க வறுத்த வெந்தயத்தை இடித்துக் கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் வயிற்றுப் போக்கு இருப்பின் அதற்கும் வெந்தயம் சிறந்த மருந்து. பெண்களுக்கு மாதவிடாயின் போது வெந்தயம் கொடுத்தால் நன்மை பயக்கும். இவற்றோடு காய்ச்சல், சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கும் நிவாரணியாகக் காணப்படுகின்றது இந்த வெந்தயம். மேலும் தலைக்கு வைக்கும் எண்ணெய்க்குள் வறுத்தோ அல்லது சாதாரணமாகவோ வெந்தயத்தை போட்டுவைத்துக் கொண்டால் அது நல்ல குளிர்ச்சியைத் தரும். மொத்தத்தில் வெந்தயம் என்பது நன்மை தரும் பொருளாகக் காணப்படுகின்றது.
பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. தலை முடி கொட்டுவதை நிறுத்த, வெந்தயத்தை தண்­ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போல அரைத்து, தலையில் தேய்த்து, அரைமணி நேரம ஊற வைத்து குளிக்க வேண்டும்.
ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு.....!
கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர். அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில.......

  * குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.
* கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
* தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.
* உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.
* இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.
* பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.
* பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.
* பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.
தெரிந்துகொள்வோமா....
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும்.
* வாழைப்பழங்களில் சோடியம், கால்ஷியம், பொட்டாஷியம் போன்ற பலவகைச் சத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் இருதய அழுத்தம் ஏறாமல் சீராக நடைபெற்று வரும்.
* தேங்காய் பயன்படுத்தும் உணவுகளில் கூடிய வரை தேங்காயைக் குறைத்துக் கொண்டு, டோஃபு எனப்படுகிற சோயா பனீரை சேர்க்கலாம். கொழுப்புச் சத்து அதிகமுள்ளவர்களுக்கும், இதயப் பாதிப்பு உள்ளவர்களுக்கும், எடை குறைக்க நினைப்போருக்கும் ஏற்றது இந்த டோஃபு.
* லவங்கப்பட்டை சேர்த்துக் கொதிக்க வைத்த தண்­ணீரை பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டு, தினம் ஒரு முறை வாய் கொப்பளிக்கலாம். இயற்கையான மவுத் வாஷான இது, வாய் நாற்றத்தைக் தவிர்க்கும்.
* குழந்தைக்கு மார்பிள் சளி கட்டிக்கொண்டால், வெற்றிலையில் தேங்காய் எண்ணையைத் தடவி விளக்கில் சூடுபடுத்தி இளம் சூட்டில் மார்பில் பற்றுப்போடலாம். சளி கரைஞ்சிடும். சில குழந்தைகளுக்கு தலையில் சூடு இருக்கும். இதுக்கு குங்குமப்பூவை அரைச்சு பத்துப் போடலாம்.
* தினம் ஒரு கேரட்டை பச்சையாக கடிச்சி சாப்பிட்டால் வாத நோய் ஏற்படற வாய்ப்பு 68 சதவீதம் தவிர்க்கப்படுகிறது.

* வேலைக்கு போற பெண்கள் சிலர் அவசரத்துல சாப்பிடக்கூட மாட்டார்கள்... அந்த மாதியான பெண்கள் காபி குடிக்கிற டம்ளர்ல ஒரு டம்ளர் கேப்பைக்கூழ் குடிச்சிட்டுப்போகலாம். பசி அடங்குவதோடு உடம்புக்கு சத்தையும் தரக்கூடியது கேப்பைகூல்.
பித்தவெடிப்பு மறைய
காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
தொண்டை வலிக்கு
பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.
இருமல் தொல்லைக்கு
தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.
இருமல் சளிக்கு
தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.


கட்டிகள் உடைய
மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.
பேன் தொல்லை நீங்க
வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.
மேனி பளபளப்பு பெற
ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.


தும்மல் வராமல் இருக்க
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.
கரும்புள்ளி மறைய
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
தொண்டை கரகரப்பு நீங்க
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.
கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
இருமல் சளி குணமாக
சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

கொய்யாப்பழத்தில் சத்து உள்ளது என்பதுபோல் அதன் இலையிலும் மருத்துவத்தன்மை உள்ளது என்று எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியாது.  வயிற்றுப்போக்கை நிறுத்துவதில் ஆற்றல் படைத்தது கொய்யா இலை என்றால் அது மிகையல்ல........
* கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்­ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
* பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
* சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
* குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
* காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
* வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாற்றை அருந்தினால் பித்த மயக்கம், வாந்தி, கண்ணோய், இரத்த சோகையால் ஏற்பட்ட சோர்வு முதலியவை நீங்கும். உடலுக்கு புத்துணர்வை தரும். நன்கு பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும். எலுமிச்சம் சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால் மனநோய், மன அழுத்தம் நீங்கும். உடலில் தேய்த்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட சில வியாதிகள் குணமடையும். நகச்சுற்றுக்கு இதன் சாறே சிறந்த மருந்து. யானைக்கால் வியாதி, கண்ணோய், காதுவலிக்கும் எலுமிச்சை சாறு சிறந்த மருந்து.

இஞ்சி சாறு:
நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என்றார்கள். இம்மூன்றையும் தினமும் உட்கொண்டால் நோய் என்பதே நம்மை நெருங்காது.

இஞ்சியை சாறு எடுத்து சிறிதளவு தினமும் அருந்தினால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி, குடல்நோய், பித்த மயக்கம், போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது உற்ற மருந்தாகும். மேலும் தொண்டைப்புண், குரல் கம்மல், இவைகளைக் குணப்படுத்தும்.

கரிசலாங்கண்ணிச் சாறு:
கரிசலாங்கண்ணிச் சாறு ஜலதோஷம், காய்ச்சல், உடல்வலி, விஷக்கடி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் போன்றவற்றை குணப்படுத்தும். இதன் சாறை காலையில் அருந்துவது நல்லது. அல்லது மதிய உணவுக்குப்பின் சூப் செய்து அருந்தலாம்.

பொன்னாங்கண்ணிச் சாறு:
பொன்னாங்கண்ணி பல வகையான தைல வர்க்கத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த பொன்னாங்கண்ணி கீரையை சூப் செய்து காலை மாலை இருவேளை என 15 நாட்களுக்கு அருந்தி வந்தால் கண் நோய்கள் ஏதும் அண்டாது. உடலின் வெப்பத்தைக் குறைத்து உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.

தூதுவளைச் சாறு:
வறட்டு இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைப்புண், அடிக்கடி ஜலதோஷம் உள்ளவர்கள் தூதுவளைச் சாறு அருந்தி வந்தால் சளித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

அருகம்புல் சாறு:
அருகம்புல் சாறானது இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் உடலுக்கும் புத்துணர்வை கொடுக்கிறது. உடலில் தேங்கியுள்ள அசுத்த நீர் அனைத்தையும் வெளியேற்றுகிறது.

தண்­ணீர் விட்டான் கிழங்கு சாறு:
தண்ணீ­ர் விட்டான் கிழங்கின் சாறை எடுத்து தினமும் காலையில் அருந்தி வந்தால் உடல் சூட்டை தணித்து பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலைத் தடுக்கும். தாது புஷ்டியை கொடுக்கும்.
பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.
வெள்ளைப் பூண்டு சாறு:
வெள்ளைப் பூண்டு சாற்றை காதில் இரண்டு சொட்டு விட்டால் காது மந்தம் குறையும். உள்நாக்கில் தடவினால் உள்நாக்கு வளர்ச்சி (டான்சில்) குறையும். மேலும் சிறிது அருந்தினால் இருமல், சுவாசம் அடைப்பு, மலக்கிருமிகள் நீங்கும். உடலின் மேல் சுளுக்கு ஏற்பட்ட பகுதிகளிலும் தடவலாம்.

வெற்றிலைச் சாறு:
வாத பித்த கபத்தினை அதனதன் நிலையில் சமப்படுத்த வெற்றிலைச் சாறு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும். காணாக்கடிகளுக்கு இதன் சாறு சிறந்த மருந்து. அஜீரணத்தைப் போக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.

வேலிப்பருத்தி சாறு:
சுவாசம், காச நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். கருப்பையிலுண்டாகும் பக்க சூலைக்கு இதன் சாறு தேன் கலந்து கொடுத்தால் பக்க சூலை நீங்கும். கை கால் வீக்கங்களுக்கு மேல் பூச்சாகத் தடவலாம்.

குரல் மாற்றத்தை சரிசெய்ய:
கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிகொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும்.

தொண்டைப் புண் ஆற:
வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும். அல்லது கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் ஆறும்.

தொண்டை நோய்:
மாதுளம் பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேனும் கலந்து சாப்பிட தொண்டை நோய் அகலும்.

தொண்டை கரகரப்பு குணமாக:
சுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். அல்லது பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்
.
தொண்டைக் கட்டு குணமாக:
மாவிலை, பச்சை இலையை நெருப்பில் போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால் தொண்டைக்கட்டு குணமாகும். அல்லது மாவிலையை தேன் விட்டு வதக்கி நீரில் கலந்து அருந்த தொண்டைக்கட்டு, குரல் கமறல் தீரும்.

தொண்டை சதை வளர்ச்சி குறைய:
வில்வ இலை சாறு, துளசி இலை சாறு 100 வீதம் எடுத்து நல்லெண்ணை 500 மில்லியில் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி பாட்டிலில் வைக்கவும். தினசரி ஒரு கரண்டி எண்ணை எடுத்து வாயில் விட்டு சில நிமிஷங்கள் வாய் முழுவதும் ஒதுக்கி பின் கொப்பளிக்கவும். 10 தினங்கள் கொப்பளிக்க குணம் தெரியும்.

தொண்டை சதை குணமாக:
புளியையும், உப்பையும் சமஅளவு எடுத்து மைய அரைத்து நாக்கில் தடவிவர குணமாகும். அல்லது துளசி தைலத்தை அரைத் தேக்கரண்டி வாயிலிட்டு தொண்டை வரை கொப்பளித்து வர குணம் தெரியும்.

ஈறுகளில் ரத்தக்கசிவு குணமாக:
இலந்தை மரத்தின் கொழுந்துகளை பறித்து நீரில் காய்ச்சி சிறிது உப்பு சேர்த்து அந்நீரை வாய் கொப்பளிக்க ஈறுகளில் வரும் இரத்தக்கசிவு நிற்கு

இலந்தைப்பழம்:
சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டைதான் அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும்
இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப்பழத்தில் வைட்டமின் 'ஏ' சத்தும் சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் பெறவும் இலந்தைப்பழம் உதவிபுரிகிறது. இது உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும். தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். அடிக்கடி வாந்தி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.

களாப்பழம்:
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் களாப்பழம் கருநிறத்துடன் முட்டை வடிவத்தில் காணப்படும். களாக்காயாக இருக்கும்போது ஊறுகாய் போட பயன்படுகிறது. இது புளிப்புச் சுவையுடன் காணப்படும்.
நன்றாக கனிந்த களாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது. இதில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை களாப்பழத்திற்கு உண்டு. உணவு உண்டபின் இந்த பழம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகி நன்றாக பசியெடுக்கும். உடல் உஷ்ணம் காரணமாக தொண்டையில் ஏற்படும் வலியை களாப்பழம் குணப்படுத்துகிறது. உடல் சூட்டினை சமன்படுத்தும் தன்மை களாப்பழத்திற்கு அதிகம் உண்டு.

ஆல்பக்கோடா பழம்:
தமிழ் நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் 'ஏ', 'பி' உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. இது உடலுக்குப் பலத்தைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.

காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும். வாய்க்கசப்பைப் போக்கும். நாவறட்சி மாறும். வாந்தியை நிறுத்தும். தலைவலியை குணப்படுத்தும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் சொரி, சிரங்கு உடனடியாக குணமடையும்.
வேப்பம்பழம்:

வேப்ப மரத்தின் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. நன்றாக முற்றி மரத்திலிருந்து தானாகவே கீழே விழும். பழங்கள் நன்றாக இனிப்பாக இருக்கும்.

வேப்பம் பழம் பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது. எந்த நோயும் வராமல் பாதுகாக்கும். இது பித்தத்தை தணிக்கும். சொரி, சிரங்கு மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தும்.
பழம் உதிரும் சீசனில் நன்றாக கனிந்த பழங்களை சேகரித்து அதை நீர் விட்டு கழுவி தோலையும், கொட்டையும் எடுத்துவிட்டு சுத்தமான துணியில் வடிகட்டி எடுக்கவும். எந்த அளவிற்கு பழச்சாறு இருக்கிறதோ அந்த அளவிற்குச் சர்க்கரையைச் சேர்த்து சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு, அதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். பாகுபதம் வந்த சமயம் இறக்கி வைத்து ஆறிய பின் பாட்டிலில் ஊற்றிவைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான வியாதிகள் குணமடையும். பித்தம் தொடர்பான நோய் தீரும்.